புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 

மீண்டும் முன்னணியில் இ.தொ.கா.

மீண்டும் முன்னணியில் இ.தொ.கா.

மலையகத்தின் ஒருஸ்திரமான அமைப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல் மூலமாக தாம் மேலும் ஒரு பலமான சக்தி என்பதை பதிவு செய்துள்ளது.

கட்சி தாவியவர்களின் போலிப் பிரசாரம் ஒன்றும் பிரமாதமாக எடுபட்டதாகத் தெரியவில்லை. இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் தமது பிரசார பீரங்கிகொண்டு முழங்கிய போதும் மக்கள் நிதானமாக நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

தாமே மக்களை காக்க வந்த தலைவர்களாக வெளிப்படுத்திக் காட்ட முனைந்தவர்கள் தற்போது வெட்கித் தலைகுணிந்து நிற்கின்றனர். காய்கின்ற மரமே கல்லடி படும் என்பது போல் இ.தொ.கா. எல்லா குற்றச் சாட்டுக்களையும் சுமந்தே வந்ததிருக்கிறது. இவற்றுக்கு இத்தேர்தலில் புள்ளடி போட்டு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். கடந்த மாகாண சபை தேர்தலில் சற்று பின்னடைவைக்கண்ட இ.தொ.கா. தன்னை சுகாகரித்துக் கொண்டதையே இம்முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

இனிமேல் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அதன் உத்தியோகஸ்தர்களும் தெரிவாகிய மாகாண சபை உறுப்பினர்களும், மேலும் மக்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள் என்று நம்பலாம், காட்டவும் வேண்டும். ஏனைய மக்களுக்கு போலவே எமது மலையக சமுதாயமும் கல்வி, சுகாதாரம், சமூக அந்தஸ்து என்பன போன்ற விடயங்களில் முதன்மை பெறவேண்டியுள்ளது. இதனை கருத்திற்கொண்டு புதிதாக தெரிவுசெய்த மாகாண சபை உறுப்பினர்கள் செயற்படவேண்டியது. அவர்களின் கடமையாகும். இதனை அவர்கள் உள்ளத்தளவில் கொண்டு செயற்பட்டால் நாமும் உயர்வடைய வழியுண்டு. செளமியமூர்த்தி தொண்டமான் ஐயா அவர்களின் ஆத்மா அப்போது தான் சாந்திய அடையும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.