புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 

மல்லியப்பு மைனர்

மல்லியப்பு மைனர்

காகெத மே பல வேகே!''

மாகாண சபைத் தேர்தல் முடிஞ்ச பிறகு அட்டன் பகுதியில காதைப் பிளந்த ஒரு வார்த்தை என்ன தெரியுமா? என்ன?

“காகெத மே பலவேகே”

“அப்படீன்னா?”

“அப்படித்தான்”

“இப்படி ஒருத்தர் சொன்னதும், எனக்கும் அவருக்கும் பெரிய வாக்குவாதமே ஏற்பட்டுடிச்சு. ஏன்னா, தேர்தல் முடிஞ்ச கையோட வெற்றிபெற்றவங்க எல்லாம் அதக் கொண்டாடணுமில்லயா? அதத்தான் செய்திருக்காங்க. ஆயிரத்திற்கும் மேல வாகனமாம். சிலபேருக்கு.. எங்க இருக்கோம். எந்த வாகனத்தில ஏறினோம்கிறதுகூடத் தெரியாதாம். மச்சான் நான் ஒரு வாகனத்தில இருக்கன். ஆனா, யாருடைய வாகனம்னு தெரியல... காகெத மே பலவேகே.. சத்தம் காதைப் பிளந்ததாம். சொன்னவரு ஒரு வாத்தி. சரி அதுக்கு இப்போ என்ன சார்னு கேட்டன்”

“என்ன சார் நீங்களும் மொக்குத்தனமா கேட்கிaங்கனு சண்டைக்கே வந்துட்டாரு நம்ம சாரு. அவன் அவன் வெற்றி பெற்றிட்டானு சந்தோசப்படுறான். அதுக்கு ஆதரவு தெரிவிக்கிறது குத்தம் இல்ல. என்னா பேச்சு பேசுனாய்ங்கனு தெரியுமா உங்களுக்கு? அப்படி ஓர் ஊத்தப் பேச்சு பேசினாய்ங்க சேர்னு நம்ம வடிவேல் பாணியிலயே சொன்னார்.”

“அட்டன் ஆருடையது தெரியுமா? தில் இருந்தா வாங்கடானு கூப்பிடுறாங்க சார். பக்கத்தில உள்ள ஒரு பொலிஸ்காரன் பல்லைக் கடிக்கிறான். இவிங்க வருவதுதான அப்பப்பாக்கிறது மச்சான்னு என்கிட்டயே சொல்றான் சார்.”

“அவரு என்னத்த கிழிக்கிறது.. அவன் ஏதோ பச்ச கொழந்தமாதிரி ஒண்ணுந் தெரியாமப் பேசி இருப்பான்.. தண்ணியில வேற இருந்திருப்பான்”

“நீங்க பேசுறதுதான் பச்ச கொழந்தமாதிரி இருக்கு. சார், ஓட்டு கேட்கிறவன் வேணுமின்னா எதிர்க்கட்சியா இருக்கலாம். ஆனா, அவன் உன் எதிர்வீட்டுக்காரன்கிறதயாவது நீ நினைச்சுப் பாக்கிறதில்ல. நான் இரண்டு தரப்புக்குந்தான் சொல்றன்.”

“உங்க பேச்சு தலைக்கு மேல, கண்டியில சரான்னு ஒருத்தர் கேட்டார் இல்லையா.. அவர் சொன்னார், அவர் வீட்டுக்குப் பக்கத்தில வேறோரு கட்சி வேட்பாளரும் இருந்தாராம். ஒரு பெரும்பான்மைக்காரர். இவரு தினம் அவர கண்டு மச்சான் போட்டிட்டுத்தான் மற்ற சோலிய பார்ப்பாராம்”

“அதுதான் சார் வேணும். தேர்தல் நேரம் வாக்குகளை எடுக்கிறதுக்காக சண்டைக்கோழிமாதிரி பேசிக்கிறவங்கள் எல்லாம்.. பிறகு ஒண்ணா சந்திக்கும்போது மச்சான் போட்டுக்குவாங்கதான.. அதுதான் அவர் தேர்தலுக்கு முன்னாடியே செய்திருக்கிறாரு. அப்படித்தான் இருக்கணும்கிறன்”

“நீங்கள் சொல்றது வாஸ்தவம்தான் சார். யார் யாரோ வெற்றி பெற்றுப் போறதுக்காக ஊர்ல ஒண்ணா மண்ணா இருக்கிறவய்ங்க நீங்க என்டா அடிச்சிக்கணும்? அப்படீங்கிaங்க?”

“அதத்தான் சார் சொல்றன். ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்னு சும்மாவா சொன்னாய்ங்க.. கூத்தாடிங்க பிரிச்சி வைக்கத்தான் பாப்பாய்ங்க.. கொஞ்சம் புத்தியா நடந்துக்கஙகடான்னுதான் கேட்டுக்கிறன்...”

“அப்படிங்கிaங்க..ம் அதென்ன ய்ங்க நம்ம வடிவேல் மாதிரி?”

“சொல்றமாதிரி சொன்னாத்தான் புரியும்.. அதுதேங்..”

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.