புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 

சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஒப்பற்ற தலைவர்

சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஒப்பற்ற தலைவர்

(கடந்த வாரத் தொடர்)

நுவரெலியா - மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட இ.தொ.கா. தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் மூன்றாவது முறையாகவும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இன்று அனுபவிக்கின்ற அரசியல், பொருளாதார, சமூக மேம்பாட்டு அபிவி ருத்திகளுக்கு பிள்ளையார் சுழி இடப்பட்டது.

இதன் பின்னரே மலையகப் பகுதிகளில் அமைந்துள்ள தோட்டப் பாடசாலைகள் அரசுடமையாக்கப்பட்டு அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்திய வம்சாவளி இனத்தைச் சேர்ந்த பல்லாயிரம் இளைஞர் யுவதிகள் ஆசிரியர் தொழிற்துறைக்கு உள்வாங்கப்பட்டனர்.

அத்தோடு முதல் முறையாக இந்திய வம்சாவளி இனத்தைச் சார்ந்த இளைஞர்கள் இலங்கை காவல் துறையில் அவர்களின் தகைமைகளுக்கேற்ப நியமனம் பெற்றனர். அத்தோடு தபால் திணைக்களத்தின் ஊழியர்களாக பலர் நியமனம் பெற்று தபால் திணைக்களத்தின் சேவை தோட்டப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

காலங்காலமாக நாடற்றோர் என ஒடுக்கப்பட்டிருந்த ஒட்டுமொத்த இந்திய வம்சாவளியினருக்கும் நாடற்றோருக்கான பிரஜhவுரிமை வழங்கல் சட்டம் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இலங்கை வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் பிரஜhவுரிமை, வாக்குரிமை என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டது.

13ஆவது திருத்த சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மாகாணசபை ஆட்சிமுறை யிலும் பிரதேச சபை உள்ளூராட்சி முறையிலும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கணிசமான அளவு தெரிவு செய்யப்பட்டதுடன் மத்திய ஊவா மாகாண சபைகளில் அமைச்சுப் பொறுப்புக்களையும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களையும் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் பிரதி நிதிகள் கைப்பற்றினர்.

கல்வித்துறை அபிவி ருத்தியில் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் தீர்க்கதரிசனமான நடவடிக்கைகளினால் இன்று பலநூறு பட்டதாரிகள் உருவாக்கம் பெற்றுள்ளதோடு மலையக மக்களின் கனவாக இருந்த அரசாங்க சிவில் நிர்வாக சேவை யில் தொழில் வாய்ப்பும் பெற்றுள்ளனர்.

அத்தோடு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் தொடர்பில் மிக உன்னிப்பாக கவனமும் அக்கறையும் செலுத்திய சௌமியமூர்த்தி தொண்டமானின் முயற்சியில் இன்று தோட்டப்புறங்களில் பல மாடி கட்டிடங்களைக் கொண்ட பாடசாலைகள், தோட்டப்புற வீதி அபிவிருத்தி, தோட்டப்புற வீடமைப்பு வசதிகள், தோட்ட குடியிருப்புகளுக்கு மின்சார இணைப்பு வசதிகள் போன்ற இன்னோரன்ன சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட அனைத்து அபிவிருத்தி பணிகளிலும், உரிமைகளைப் பெறுவதிலும் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் பங்களிப்பும் செய்த சேவைகளும் தியாக உணர்வும்; கடின உழைப்பும் மகோன்னதமானது. (முற்றும்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.