புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 
சிகரம் ெதாட்ட ெசம்மல்

சிகரம் ெதாட்ட ெசம்மல்

எனது கணவர் நேர்மையானவர், அமைதியானவர்,
மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதவர்,
அதே போல் திறமையானவர்,
இப்படியான ஒருவரை கணவராக அடைந்ததற்கு
நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

- திருமதி டயானா ரூத் கணேசன்

22ஆம் திகதி,

9ஆம் மாதம்,

1934ஆம் வருடம்

அந்தி நேரத்து ஆதவன்,

அடிவானில் மறைந்து கொண்டிருந்தான்

மாலையும் இரவும் சந்தித்து,

இரவு, மாலைக்கு விடை கொடுக்கும் நேரம்

இதமான காற்று,

பதமாக வீசிக்கொண்டிருந்தது.

மிகத்தொலைவில்,

மிகமிகத் தொலைவில்,

குயில் ஒன்று கூவும் ஓசை,

இடைக்கிடையே ஒலித்துக் கொண்டிருந்தது,

தென்றலின் இசையமைப்பில்,

மூங்கில் மரங்கள் ஒன்றை ஒன்று உரசி ஏற்படுத்திய அந்த மெல்லிய ஒலி,

மயிலிறகால் இதயத்தை வருடியதைப் போலிருந்தது,

ரம்மியமான இந்த நேரத்தில்,

ஒருவர் மட்டும்,

கைகளைப் பின்னால் கட்டியபடியே,

அப்படியும் இப்படியும் நடந்து கொண்டிருந்தார்.

எப்போதும் புன்னகைப் பூத்துக் கொண்டிருக்கும் அவரது முகம்,

அன்று இறுகிப் போயிருந்தது,

கண்டி மாவட்டத்திலுள்ள அம்பிடிய என்ற கிராமம் அது,

அங்கே உள்ள மருத்துவமனை ஒன்றில் தான் அவர் அப்படியும் இப்படியும்

நடை பயின்றுக் கொண்டிருந்தார்,

திடீரென்று அவர் நடை நின்றது,

முகத்திலிருந்த இறுக்கம் மெல்ல தளர்ந்து,

ஆச்சரியம் அள்ளிக் கொண்டது,

காரணம்,

குவா... குவா என்ற அந்த இனிமையான சத்தம் தான்,

சாத்தப்பட்டிருந்த அந்த அறையை நோக்கி வேகமாக ஓடினார்.

வாசலில் வந்து நின்றார்,

சிறிது நேரத்தில்,

வாசல் கதவு திறந்து கொண்டது.

வெளியே வந்த அந்த பெண்மணியை,

தெய்வத்தைப் பார்ப்பதைப் போல் அவர் பார்த்தார்.

உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு என்று அந்தப் பெண்

சொன்னதும்,

அந்த வார்த்தைகள்,

அவரது காதில்,

தேன் மாறி பொழிந்தது போல் இருந்தது,

இறுகிப் போயிருந்த அவரது முகத்தில்,

மகிழ்ச்சி,

மகரந்தம் சேர்ந்தது,

சற்று பரபரப்படைந்த அவர்,

தகவல் சொன்ன அந்த பெண்ணின் பின்னால் விரைந்து ஓடினார்.

அம்மா ஒரு போன் கோல் எடுக்கலாமா அவசரமா பேசனும்

பரபரப்பு அவரது வார்த்தைகளால் இடைவெளியை ஏற்படுத்தியது

என் பின்னால் வாங்க என்று சொல்லியபடியே நடந்து சென்ற அந்தப் பெண்

சற்றுத் தொலைவில் இருந்த அறைக்குள் நுழைந்து தொலைபேசி

அழைப்பொன்றை எடுத்துக் கொடுத்தாள்.

யார் யாருடனோ எல்லாம் தொலைபேசியில் பேசினார்,

அவருக்குப் பிறந்திருப்பது தலைமகன் அல்லவா?

மனதிற்குள் மகிழ்ச்சி இல்லாமலா இருக்கும்?

யார் இவர்?

அவர் பெயர் தான், வைத்திலிங்கம் பழனிசிங்கம்.

இந்தியப் பிரஜையான இவர்,

தெய்வானை என்பவரை மணந்துக் கொண்டு,

ருவன்வெல்ல செஸ்டபோட் தோட்டத்தில்,

கங்காணியாக கடமையாற்றி வந்தார்.

இவர் பிள்ளையார் மீது அதிகம் பக்தி கொண்டிருப்பவர் என்பதினால்,

தனது மூத்த மகனுக்கு,

கணேசன் என்று பெயர் வைத்தார்.

கணேசன் பிறந்த பிறகு,

அவரது தந்தைக்கு,

வாய்ப்புகளும் வசதிகளும்,

வழி திறந்து வரவேற்பு கொடுத்தன,

கணேசன் வளர வளர,

அவர் தந்தை வைத்திலிங்கம் பழனிசிங்கத்தின் புகழும் உயர்ந்தது,

அதே போல்,

பொருளாதாரமும் உயர்ந்து கொண்டே போனது,

இறுதியில்,

என்ன நடந்தது தெரியுமா?

எந்த தோட்டத்தில் கங்காணியாக சம்பளத்திற்கு வேலை செய்தாரோ,

அந்த தோட்டத்தையே விலைக்கு வாங்கி விட்டார்.

முதலாளியான பிறகு அவரால் மெளனமாக இருக்க முடியவில்லை,

அதனால்,

நான்கு நண்பர்களுடன் சேர்ந்து,

காலஞ்சென்ற அkஸ் அவர்கள் ஆரம்பித்திருந்த

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தில் இணைந்து

தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்டார்.

இந்த சமயத்தில் எட்டியந்தோட்டையிலிருந்த கெப்ரியல் கல்லூரியில்,

சிறுவன் கணேசன்,

தனது ஆரம்ப கல்வியை கற்றுக் கொண்டிருந்தான்,

கணேசனின் கல்வி வளர வளர,

அவரது குடும்ப அங்கத்தவரின் தொகையும் உயர்ந்து கொண்டே போனது, அதாவது,

கணேசனுக்கு 4 சகோதரர்களும் 4 சகோதரிகளும் என்று அந்த உறவு

அதிகமாகியது.

இந்த சமயத்தில் தான்

அந்த அதிசயம் நடந்தது

(அடுத்த வாரம் சந்திப்போமா....)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.