புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 
நிழலும் நிதர்சனமும்

நிழலும் நிதர்சனமும்

தென் இலங்கையில் வெலிகம என்ற சிறுநகரமொன்று இருப்பதை நாமறிவோம். அந்தப் பிராந்தியத்தில் தெனிப்பிட்டிய, மதுரப்புர என்ற இடத்தில் தமிழ் அறிவகம் என்ற இல்லத்தில் இஸ்மாயில் எம். பைரூஸ் என்ற கல்விமான் “கலைமகன் பைரூஸ் என்ற பெயரில் கவிதை உட்படப் பல எழுத்தாக் கங்களைத் தந்து கொண்டிருக்கிறார்.

கலைமகன் பைரூஸ் எழுதிய கவிதைகளின் தொகுப்பு “நிழலும் நிதர்சனமும்” என்ற பெயரில் வெளியாகியது. அந்தக் கவிதை நூலுக்கு மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட மற்றொரு இஸ்லாமியக் கல்விமான் ஆன கலைவாதி கலீல் ஒரு முன்னுரையை எழுதியிருந்தார்.

அதிலே, “கவிதையொன்றைப் படைப்பதற்கு மிக அவசியமான இலக்கணக் கூறுகளான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி போன்றவற்றை நன்கு கற்றுத் தெளிந்ததன் பின்னரே கலைமகன் கவிதை படைத்துள்ளார் என்பதற்குச் சான்று கூறும் பல கவிதைகள் இத் தொகுப்பில் காணப்படுகின்றன” எனக்கூறுகிறார்.

இது உண்மையே பைரூஸ் ஒரு பட்டதாரி. தமிழில் நன்கு பரிச்சயமான சொல்லேருழவர்.

இவர்கவிதைகள் தொடர்பாக வேறு சில சுவைஞர்களும் சான்றிதழ் வழங்கியுள்ளனர். திக்குவல்லை ஷப்வான், ஸெய்யித் ஹ¥ஸன் மெளலானா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

மர்ஹ¥ம் எம். எஸ். எம். ஷம்ஸ், எம். எஸ். பாஹிம், மானா மக்கீன், மர்ஹும் எம். ஏ. ரஹ்மான், ஆகியோரும் இவர் வளர்ச்சியில் பங்கெடுத்தனர்.

இவர் இதழியலாளராகவும் அனுபவம் பெற்றிருக்கிறார். எஸ். எச். நிஃமத் நடத்திய “இடி”, எம். பெளசர் நடத்திய “முஸ்லிம் குரல்”, “சுடர்ஒளி” ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்து போதிய அனுபவங்களைப் பெற்ற கலைமகன் பைரூஸ், தாமே ‘புத்தொலி’ என்று மாத சஞ்சிகையை நடத்தவும் முற்பட்டார்.

இவர் ஏன் கவிதைகளை எழுது கிறார் என்று அறிய முற்பட்டால், அவரே கூறுகிறார்.

“சமூதாயத்தில் பல அவஸ்தை களுக்கு நான் உள்ளாகியிருக்கின்றேன். அப்போதெல்லாம் ஆத்திரத்தைப் பிய்த்துக் கொண்டு எனக்குள் கவிதைகள் பிரசவமாகின்றன; ஏதேனும் ஒரு அவலத்தை நேரடியாகக் காணும்போது கவிதை எனையறி யாமலே பிய்த்துக் கொண்டு வருகின்றது. நானெழுதும் கவிதை களுக்கு நானே முதல் வாசகனாகி பலமுறை படித்து சுவையாயின் மாத்திரமே பத்திரிகைகளுக்கு அனுப்புவேன்”.

இவருடைய கவிதைகளிலொன்று “யாப்புக் கவிதையோடு புதுக்கவிதையும் கற்றேன். காரிகையுந் தண்டியலங்காரமும் சுவைத்தேன். ஒப்பிலாமணிகள் பலவுங்கற்றேன். ஆயின் ஒன்றெனக்கென கவியமைப்புந் தெளிந்தேன்”

கலைவாதிகலீல் கூறியிருப்பது போல், “உண்மையில் இவரது கவிதைகள், கவிதைக்கான இலக்க ணத்தைக் கொச்சைப்படுத்தாத வகையில் எழுதப்பட்டுள்ளமை கவனிக்கற்பாலது!

கலைமகன் பைரூஸ் எழுதிய கவிதைகளில் எனக்குப் பிடித்த சில வரிகளை மாத்திரம் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

“கருத்துச் சுதந்திரம் கம்பீர மெனக்கூறி காடைத்தனம் புரியும் காமுக வெழுத்தாளன்.

மடமை மல்ஹிமனிதம் மறைந்து மதுமாது மடைபெருகி, சோகமுகில் கலைந்துவிடும் காலம் வரும்,

விண்ணும் மண்ணும் வடிவமைந்த வல்லான் விடிவை யெறிந்திடும் வடிவிலா தோனாய்கள் மண்ணி னின்றும் மடிந்து வீழ்ந்திட, திருமண வீசா எடுத்து வரப்போகிறாய், மெளனிகளாக நீ உன்னளவில் நானும் என்னளவில் நீயும் எங்களுக்கு எல்லைக் கோடுகள் வயது எங்களுக் குள் வரையறை காணாத போதும் நீயும் நானும் மெளன கீதங்கள் சாந்தமாய் நிற்பாவனைப் பார்த்து சத்தில்லை யிவனிடம் எனச் சொல்லி சிந்தனை யறியாது கர்ச்சிக்கும் சிங்கங்களிவர்கள் குருத்தோலைகள், பால்பல் முளைத்த நாள் தொட்டு, விடிவுக்காக வாடிநிற்கும் விட்டில்கள் நாங்கள், நாளைய விடிவுக்காக ஏங்கி நிற்கும் நாடகமன்றத்தில் நசுக்கப்பட்டவர்கள் நாங்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.