புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 

சிறந்த பயிற்சி மனிதனை நெறிப்படுத்தும்

சிறந்த பயிற்சி மனிதனை நெறிப்படுத்தும்

தேவசகாயம் அன்ரோ டினேஸ் கராத்தே துறையில் பிரவேசம் பற்றி...

சிறுவயது முதலே ஆக்ஷன் திரைப்படங்களைப் பார்க்கும்போதே இதனைக் கற்கவேண்டும் என்று ஆசை வந்தது. எனது 13 ஆவது வயதில் யாழ். நகரில் கராத்தே ஆசிரியர் மோகன் வின்சன், ஆசிரியர் மன் கபிரியேல் ஆகியோரிடம் கலையைக் கற்க ஆரம்பித்தேன். கற்க ஆரம்பித்த காலம் முதலே கராத்தே தேர்வுகளில் கிடைத்த சிறப்புத் தேர்ச்சி மற்றும் யாழ். நகரில் நடைபெற்ற கராத்தே சுற்றுப் போட்டிகளில் கிடைத்த பெறுபேறுகள், பல கராத்தே கண்காட்சிகளில் சிறப்பாகப் பங்கெடுத்து பாராட்டுகளைப் பெற்றமை என் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது.

பாடசாலையில் கற்கும் காலத்தில் வீட்டில் உணவுக்காகத் தரும் பணத்தை சேர்த்தே கராத்தே வகுப்பின் மாதக் கட்டணம் மற்றும் செலவினங்களைச் செய்தமையை மறக்க முடியாது.

கராத்தே கற்பிக்கும் சந்தர்ப்பம் எப்போது மலர்ந்தது?

கராத்தேயில் குறிப்பிட்ட தரத்தை அடைந்ததுமே எனக்கு இதனைக் கற்பிக்கவேண்டுமென்ற ஆர்வம் வந்தது. வகுப்பில் மாத்திரமல்ல, வீட்டில் இடைவிடாது பயிற்சி செய்வதும். கலை தொடர்பாக ஆராய்வதும் எனது பிரதான பொழுது போக்காகும். 1996 ஆம் ஆண்டு எனது நண்பர்களுக்கு முதன் முதலில் கராத்தேயைக் கற்க ஆரம்பித்தது முதல் மாணவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக வளர்ச்சியடைந்தது.

2001 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட விளையாட்டுத்துறை செயலகத்தினால் யாழ். மாவட்ட கராத்தே சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டபோது அதன் முதல் செயலாளராக நான் தெரிவு செய்யப்பட்டமையும் ஒரு சிறப்பாகக் குறிப்பிட முடியும். கராத்தே துறையில் திருப்பு முனையாக அமைந்த விடயங்கள்.... 2002 ஆம் ஆண்டில் இலங்கை கராத்தே தந்தை என அழைக்கப்பட்ட கராத்தே பேராசான் சிகான் பொணி ரொபட்ஸின் கழகத்தில் இணைந்து மேலதிக நுட்பங்களைக் கற்க ஆரம்பித்தமை.

2005 ஆம் ஆண்டில் சிகான் பொணி ரொபட்ஸினால் 4 ஆம் கறுப்புப்பட்டிக்குத் தரம் உயர்த்தப்பட்டமை. 2007 இல் சிகான் பொணி ரொபட்ஸின் மவின் பின்னர் ஜப்பானிய கராத்தே நிபுணர் சிகான் ரி. சுசுக்கியினால் நேரடியாக நடத்தப்பட்ட கராத்தே உயர் தேர்வில் தேர்ச்சியடைந்து சர்வதேச ஜப்பானிய கராத்தே விற்பனர். கிராண்ட் மாஸ்டர் ஹன்ஸோ ஹிரகசு கனசவா இன் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் மற்றும் பயிற்றுனர்கான் அங்கீகாரம் பெற்றமை.

2009 இல் இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் நேர்முகத் தேர்வு மற்றும் செயற்றிறன் தேர்வில் பங்கெடுத்து தேசிய அங்கீகாரம் பெற்றமை. 2010 இல் இலங்கை பாடசாலைகள் கராத்தே தோ சங்கம் மற்றும் இலங்கை சோட்டோக்கான் கராத்தே தோ சம்மேளனம் ஆகியவற்றின் அங்கத்துவம பெற்றமை.

2010 இல் அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்ட கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேஷன் சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்றமை. 2010, 2011 இல் கராத்தேயின் குமித்தே மற்றும் காட்டாவில் மத்தியஸ்தர் தேர்வில் சித்தியடைந்தமை.

2011 இல் மலேசியாவில் சிகான் தான் லோ தைம் இனால் 5ஆம் கறுப்புப்பட்டி சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டதுடன், அதே வருடத்தில் அமெரிக்காவில் கிராண்ட் மாஸ்டர் கியோஸி டிவைட் ஹோலியினால் 5 ஆம் கறுப்புப்பட்டி சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டமை.

2012 இல் அமெரிக்காவில் கிராண்ட் மாஸ்டர் கியோஸி டிவைட் ஹோலியினால் சிகான் தரத்திற்கு உயர்த்தப்பட்டமை. வெளிநாடுகளில் பெற்ற அனுபவங்கள் 2005 இல் இந்தியாவின் கேரளாவில் சிகான் கோபகுமாரிடம் தற்காப்புக்கலை நுட்பங்கள், 2010 இல் மும்பையில் சிகான் செளத்ரி சத்ரஜித்திடம் சோட்டோகான் நுட்பங்கள், சென்னையில் ரென்னி சிவபாலனிடம் நுன்சாக்கு நுட்பங்கள், மலேசியாவில் சிகான் தான் லோ தைம் மற்றும் பிரித்தானிய கராத்தே நிபுணர் சிகான் நிக்கி அதமு ஆகியோரிடம் சோட்டோக்கான் நுட்பங்கள், 2011 மற்றும் 2012 களில் அமெரிக்காவில் கியோசீ டிவைட் ஹோலியிடம் சோட்டோக்கான் நுட்பங்கள், 2013 இல் அலன் தண்ணிடம் சீன தற்காப்புக்கலை வின்ங்சுன் நுட்பங்களை கற்றமையைக் குறிப்பிடலாம். கராத்தே சுற்றுப் போட்டிகளில் தங்களுடைய பங்களிப்பு பற்றி....

2010 இல் இந்தியாவில் வேல்ட் சோட்டோகான் கராத்தே தோ சம்மேளனத்தின் சுற்றுப் போட்டியில் பங்கெடுத்தமை பதக்கங்கள் கிடைக்கவில்லை. 2012 இல் மலேசியாவில் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப் போட்டியில் பயிற்றுனர்க்கான காட்டா போட்டியில் தங்கப்பதக்கமும், குமித்தே போட்டியில் வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது.
28.12.1978 யாழ். மாவட்டம்

புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பம் முதல் உயர் கல்வி வரை

பிரதம ஆசிரியர். சோட்டோகான் கராத்தே

அக்கடமி இன்ரனஷனல் ஸ்ரீலங்கா.

பிரதிநிதி: கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசன் - அமெரிக்கா சுயாதீன தொலைக்காட்சி சேவைகள் மற்றும் வசந்தம் தொலைக்காட்சி பகுதி நேர தமிழ் செய்தி அறிவிப்பாளர்.

சபை பணிப்பாளர் - தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் - இளைஞர் விவகார அமைச்சு.

2012 இல் அமெரிக்காவின் கென்துக்கியில் நடைபெற்ற திறந்த சுற்றுப் போட்டியில் காட்டாவிலா வெள்ளிப்பதக்கமும், குமித்தேயில் சிறந்த 8 போட்டியாளர்களுக்குள்ளும் தெரிவானேன். 2013 இல் இந்தியாவில் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப் போட்டியில் காட்டா போட்டியில் தங்கப்பதக்கமும், 2013 இல் மலேசியாவில் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப் போட்டியில் காட்டா போட்டியில் வெள்ளிப்பதக்கமும் கிடைத்தன. இதைவிட இலங்கையில் கடந்த மாதம் நடைபெற்ற சுற்றுப் போட்டியில் காட்டாவில் தங்கப்பதக்கம் கிடைத்ததைக் குறிப்பிடலாம்.

கராத்தே கலையில் உங்களது இலக்கு, ஆர்வலர்களுக்குக் கூற விரும்புவது:

கராத்தேயில் வந்துள்ள உயர் நுட்பங்களை கற்று சிறந்த கராத்தே நிபுணராக வரவேண்டும் என்பது தான் என் விருப்பம். கராத்தே ஒரு தற்காப்புக்கலை மாத்திரமல்ல, உடல் உறுதி, மன உறுதி, ஆரோக்கியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை அடக்கம் போன்ற விடயங்களை எம்முள் வளர்க்கும் சக்திவாய்ந்த கலையாகும். கராத்தே கலையை வகுப்பில் கற்பதோடு மாத்திரம் நிறுத்திக்கொள்ளாது தினமும் குறுகிய நேரம் என்றாலும் பயிற்சி செய்தல் மிக முக்கியமானதாகும்.

கராத்தே பயிலும் மாணவன் தன்னுடைய ஆசிரியருக்கு எந்தக் காலத்திலும் மரியாதையும், நன்றியுணர்வும் கொண்டவராக இருக்க வேண்டும். தாழ்மையும், பிறரை மதிக்கும் பண்பும் இருந்தால் மாத்திரம் தான் கராத்தேயில் மாத்திரமல்ல, வாழ்விலும் உயர முடியும். அவ்வாறு ஏனைய கராத்தே பயிற்றுநர்களையும் மரியாதை செய்தல் முக்கியம்.

சிறந்த பயிற்சியே மனிதனை நெறிப்படுத்தும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.