புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 

சைக்கிளோட்டம் ஆண்கள், பெண்கள் பிரிவில் ரங்கன, தில்ருக்'p சம்பியன்

25 வது தேசிய இளைஞர் விளையாட்டு;

சைக்கிளோட்டம் ஆண்கள், பெண்கள் பிரிவில் ரங்கன, தில்ருக்'p சம்பியன்

இருபத்தைந்தாவது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த சுமேத ரங்கனவும்,

பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷா தில்ருக்ஷி ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் சேவைகள் சம்மேளனம், இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ்விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டி மற்றும் நடத்தல் போட்டி 13ம் திகதி பொலன்நறுவை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்டதுடன், 106 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஆண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் 3ம் இடத்தினை கம்பஹா மாவட்டத்தினைச் சேர்ந்த கே. ஜி. ரஞ்சித் தயான் 2ம் இடத்தினை கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த நிஷான் மதுஷங்கவும் பெற்றனர்.

35 கி.மீ தூரம் கொண்ட பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் 2ம் இடத்தினை குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஏ. சுதர்ஷிகா பிரியதர்ஷினியும் மூன்றாம் இடத்தினை கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாதிகாத சில்வா பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நடைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரம் வருமாறு;

20 வயதிற்கும் குறைவான ஆண்களுக்கான நடைப் போட்டி

1. பிரபாத் குலசூரிய - கம்பஹா

2. டி. என். லக்மால் - களுத்துறை

3. சதுரங்க - மாத்தளை

20 வயதிற்கும் மேற்பட்ட ஆண்களுக்கான நடத்தல் போட்டி

1. ஜி. ஜி. சம்பத் நிரோஷன் - கம்பஹா

2. ஏ.சி. பிரனாந்து - நகர இளைஞர் மாவட்டம்

3. லஹிரு ஜானகா பிரான்து - களுத்துறை

20 வயதிற்கும் குறைந்த பெண்களுக்கான நடத்தல் போட்டி

1. ரி. மதுஷானி - மாத்தளை

2. கே. கோகிலவானி - வவுனியா

3. ஜே. கே. எம். சி. தமயந்தி - மொனராகலை

20 வயதிற்கும் மேற்பட்ட பெண்களுக்கான நடத்தல் போட்டி

1. ரி. எம். தினுஷா தில்ஹானி - காலி

2. எம். கே. என். சஞ்சீவனி ஜயதிலக - கேகாலை

3. ஜே. பிரியதர்ஷனி - மொனராகலை

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி இதே தினம் இடம்பெற்றது. கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஜி. கிருஷாந்தினி பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் 1ம் இடத்தைப் பெற்றதுடன், 2000ம் ஆண்டு இடம்பெற்ற போட்டியில் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த துலானியின் சாதனையையும் இவர் முறியடித்துள்ளார். 2ம் இடத்தினை புத்தள மாவட்டத்தைச் சேர்ந்த நிசன்சலாவும் 3ம் இடத்தினை குருணாகலையைச் சேர்ந்த மதுஷானியும் பெற்றுக்கொண்டனர்.

ஆண்களுக்கான போட்டியில் அம்பாந்தோட்டையைச் சேர்ந்த அமில சனத்குமார முதலாமிடத்தையும் பதுளையைச் சேர்ந்த யுக்தி நிரங்க 2ம் இடத்தினையும் களுத்துறையைச் சேர்ந்த பல்லேவெல 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.