புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

 

* யாழில் ஊடகக் குரலை நசுக்கிய பத்திரிகையின் அரசியல் முதலாளி

யாழ். ஊடகவியலாளர் குகநாதன் தாக்கப்பட்டதும் யாழ்ப்பாணத்தில் திடீரென்று முளைத்தெழுந்து குரல் கொடுத்து வந்த சுதந்திர ஊடகக் குரல் Voice of Free Media எனும் ஊடக அமைப்பின் குரல் இப்போது நசுக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக இருந்தவரை யாழில் ஊடகப்பணி யாற்ற விடாது கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம் செய் தது மட்டுமல்லாது அமைப்பை இயக்கினால் தொழிலில் வெட்டு ஏற்படும் என்று அந்தத் தனியார் பத்திரிகையின் தமிழ் முதலாளியான பாராளுமன்ற அரசியல்வாதி வெளியே தெரியாத மெளன மிரட்டல் விடுத்துள்ளதாக சத்தியமாக தலைவர் அல்ல அந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் காதோடு காதாகத் தெரிவித்தனர். இதுதான் அவரதும் அவரது பத்திரிகையினதும் பத்திரிகா தர்மமா? ஊடகச் சுதந்திரமா? பிரதேசவாதமா?

* மனமுடைந்த நிலையிலும் புதிய கட்சி ஆரம்பிக்கும் அரசியல்வாதி

கொழும்பை நேசித்துப் பின்னர் கிழக்கிற்குச் சென்று துரத்தப்பட்ட அஸ்ஸாத் சாலிய நண்பர் இப்போது வடக்கின் பக்கம் தன் பார்வையைத் திருப்பியுள்ளார். அங்கும் சறுக்கினால் அப்படியே தெற்குப் பக்கம் சென்று பார்த்துவிட்டு இறுதியாக மலையகம் போய் அங்கும் சரிவராவிட்டால் மலை உச்சியிலிருந்து குதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தனது நெருங்கிய சகாவிடம் கவலை அடைந்த குரலில் தெரிவித்தாராம். முஸ்லிம் - தமிழ் கூட்டமைப்பு என்றபெயரில் புதிய கட்சியை விரை வில் ஆரம்பிக்கவிருக்கும் இவர் அதன் மூலமா கவே வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும் போட்டியிட வுள்ளாராம். நல்ல முயற்சி. ஐயோ இவர் வேண்டாம் என்று துரத்திவிட்ட கிழக்கின் தனித்துவக்கட்சியின் பிரமுகர் கள் பலரும் இவரது புதிய கட்சிக்கு இப்போது ஆதரவாம்.

* ஆட்டோவில் செல்லவே கஷ்டப்பட்ட அஞ்ஞானானுக்கு அடித்த அதிஷ்டம்

அஞ்ஞான் உம்மா ஐக்கிய தேசியக் கட்சிக்கு வந்தது ஏதோ ஆட்சியே தனது கைகளுக்குக் கிடைத்தது போன் றதொரு மன மகிழ்ச்சியை அதன் தலைவர் ரணிலுக்கு ஏற்ப டுத்தியுள்ளதாம். அரசியல் காய்ந்து ஒன்றுக்குமே உதவாத சருகாக இருந்தவர்தான் இந்த அஞ்ஞான் உம்மா. பேரம் ஒன்று பேசினார். எதிர்பார்த்ததை விடவும் பத்து மடங்கு கிடைத்தால் விடுவாரா? அவசர போக்குவரத்திற்கே ஆட் டோ பிடிக்க கஷ்டப்பட்டவர் அதிசொகுசு வாகனம் இல வசமாகக் கிடைத்தால். அதுவும் டீசல் புல் டாங்போட்டு சாரதியோடாம். ஐம்பது வாக்குகள் எடுத்துக் கொடுக்கும் ஒரு வருக்கே இத்தனை ஆடம்பரம் என்றால் ஐயாயிரம் எடு த்துக் கொடுக்கக் கூடியவருக்கு ரணில்ஐயா என்னென்ன வெல்லாம் கொடுத்திருப்பாரோ? இனியும் கொடுப்பாரோ?

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.