புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 
ஏழைகளின் தோழனாக வாழ்ந்த டி.ஏ.ராஜபக்'

ஏழைகளின் தோழனாக வாழ்ந்த டி.ஏ.ராஜபக்'

rனப் பிரதிநிதிகள் சபையின் அம்பாந்தோட்டை உறுப்பினராக சேவையாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென சுகவீனமான திரு.டி.எம்.ராஜபக்ஷ 1945 ஆம் ஆண்டில் மறைந்தார். அவரது மறைவின்பின் வெற்றிடமான சனப் பிரதிநிதிகள் சபையின் அம்பாந்தோட்டை தொகுதிக்கு தகுந்த பிரதிநிதியாக மக்கள் வேண்டுகோளின் பேரில் திரு.டி.ஏ.ராஜபக்ஷ அதில் முன்னிற்க நேரிட்டது.

அவர் இரண்டு தசாப்தகாலமாக பிரதி அமைச்சர், பதில் அமைச்சரவை அமைச்சர் மற்றும் பிரதிச் சபாநாயகர் போன்ற பல பதவிகளையும் பொறுப்புக்களையும் வகித்துக்கொண்டு பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஆற்றிய சேவை மகத்தானதாகும். கிராமத்துப் பாடசாலையான மண்டாடுவே அரசாங்கப் பாடசாலையில் ஆரம்பக் கல்விபயின்ற அவர் இரண்டாம் நிலை கல்வி கற்பதற்காக தனது மூத்த சகோதரர்களான டி.எம்.ராஜபக்ஷ மற்றும் டி.சீ.ராஜபக்ஷவுடன் காலி றிச்சமண்ட் கல்லூரியில் சேர்ந்தார்.

இப்பாடசாலையின் கல்வி உயர் மட்டத்தில் இருந்ததுடன், அது வெள்ளையின ஏகாதிபத்தியத்தின் பொம்மைகளை உருவாக்குகின்றதும் அதே கலாசாரத்தின்படி போதிக்கின்றதுமானதொரு நிறுவனமாக இருந்தது. உணவு அருந்தும்போது கரண்டிகள், முள்ளுக் கரண்டிகள், கத்திகள் போன்றவற்றைப் பாவிப்பதும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.

அவர் தனக்கும் தனது சூழலுக்கும் நாட்டிற்கும் உகந்ததை அப் பாடசாலையிலிருந்து கற்பதற்கும் தெரிந்தெடுப்பதற்கும் தக்க புத்திசாலி என்பதை இக்காலத்திலேயே காண்பித்தார். தனது மூத்த சகோதரர்கள் இருவருடன் சேர்ந்து கரண்டி, முள்ளுக் கரண்டிக் கலாசாரத்தை எதிர்த்துக்கொண்டு எடுத்த வீர நடவடிக்கையினால் சகலரதும் கவனம் அவர்களின்பால் செலுத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட நிலைமையின் காரணமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் முக்கியஸ்தர்களாகி எதிர்கால பயணப்பாதையை அமைத்துக் கொண்டனர்.

பாடசாலை கிரிக்கெட் விளையாட்டைப் போன்று அதற்கு இணையான தொடர்பில்லாத உதைபந்தாட்ட விளையாட்டிலும் டி.ஏ.மிகத் திறமையைக் காண்பித்தார். வருடாந்த பாடசாலை கிரிக்கெட் போட்டியில் மொரட்டுவை வேல்ஸ் குமார கல்லூரியுடன் கிரிக்கெட் விளையாடி தனியே எட்டு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டு இவர் காட்டிய திறமைகள் இன்றும் அழியாததாகும்.

கல்வியை முடித்து ஊர்வந்து சேர்ந்த சகோதரர்கள் மூவரில் மூத்தவரான டீ.சீ.ராஜபக்ஷ திடீர் மரண விசாரணை அதிகாரி பதவியை வகித்துக்கொண்டு சமூக சேவையில் ஈடுபட்டார். இரண்டாவது சகோதரரான டி.எம்.ராஜபக்ஷ அரசியலை தெரிந்தெடுத்து பொதுமக்கள் சார்பாக அம்பாந்தோட்டையை பிரதிநிதித்துவப்படுத்தி சனப் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரானார். வெள்ளையின ஏகாதிபத்தியத்தின் காரணமாக வேரூன்றிய ஏகாதிபத்திய பணக்கார வம்சத் தரத்தினால் பொதுமக்கள் பீடிக்கப்பட்டிருந்தார்கள். தொழில் தரங்கள் மற்றும் சமூகத் தேவைகளை நிறைவேற்றிய ஏழைக் கிராமவாசிகள் குலப் பீடிப்புக்கு உள்ளாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருந்தனர். இத்தகைய கேடான சமூகச் சூழ்நிலையை அகற்றிவிட்டு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை முன்னெடுப்பதில் டி.எம்.முன்னணியில் திகழ்ந்தார். இருந்தும் அன்னார் ஆரம்பித்த பெரும்பாலான பணிகள் வெற்றிகரமாக முடிவுறுத்தப்பட்டாலும் முடியுறாத பணிகளை வைத்துவிட்டு திடீரென மறைந்துவிட்டார். பிரதேச மக்கள் இந்தக் குறையைப் பூர்த்தி செய்யக்கூடிய தலைவர் ஒருவரைத் தேடும்போது டி.எம்.மின் வெற்றிக்கு அருகே இருந்துகொண்டு சக்தியூட்டிய அவரது இளைய சகோதரரான டி.ஏ.யை கண்டனர்.

இருந்தும் டி.ஏ.ஒருபோதும் தீவிரமான அரசியலில் நேரடியாகத் தலையிட விரும்பவில்லை. ஆடம்பரமின்றி நிம்மதியாக வாழும் விவசாயி ஒருவராக பிரதேசத்து மக்களுடன் வாழ்ந்துகொண்டு அவர்களுக்கு உதவிபுரிந்து வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை நடாத்துவதையே அவர் விரும்பினார். அதற்கேற்றதானதொரு குடும்பத்தை சேர்ந்த தோன தந்தினா சமரசிங்க திசாநாயக்க எனும் குலப் பெண்ணை மணந்ததுடன் அப்போதைக்கு அவருக்கு அன்பார்ந்த புதல்வரொருவரும் புதல்வியொருவரும் இருந்தனர்.

தமது மூத்த சகோதரர் டி.எம்.ராஜபக்ஷவின் மறைவால் வெற்றிடமான அம்பாந்தோட்டை சனப் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பதவியில் போட்டியிடுமாறு மக்கள் அழைப்புவிடுத்த காலம், தனது மனைவியார் மேலும் பிள்ளையொன்றை எதிர்பார்த்துக்கொண்டிருந்த காலமது. அதாவது மூன்றாவது பிள்ளை பிறப்புக்கு ஆயத்தமாக நாட்களை எண்ணிக்கொண்டிருந்த காலமாகும். ஆகையினால் டி.ஏ.அரசியல் போர்களத்திற்குச் சென்று தனது மனைவியாருக்கும் குடும்பத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் குறைபாடுகள் ஏற்படுவதை விரும்பவில்லை. வேட்பு மனுக்கனை ஏற்றுக்கொள்ளும் தினம் வந்தது. அன்றைய தினமும் அவர் தனது கிராம விவசாயிகளுடன் வயலுக்குள் வேலை செய்துகொண்டிருந்தார்.

வேட்புமனுவைத் தயாரித்துக்கொண்ட மக்கள் அதில் கையொப்பம் பெறுவதற்காக அவரைச் சந்திக்க வந்தனர். ஆச்சரியமாக இருந்தது. அவர் வயலில் உழுதுகொண்டிருந்தார். இருப்பினும் மக்களின் கோரிக்கையின் காரணமாக வயலிலுள்ள வக்கடையில் கைகளைக் கழுவிக்கொண்ட அவர் வயலிலிருந்து கரையேறி வேட்புமனுவில் கையொப்பமிட்டார். அதையடுத்து வேட்புமனுவைக் கையளிப்பதற்காக மக்கள் சகிதம் அம்பாந்தோட்டை சக்சேரிக்கு / அரச அதிபர் அலுவலகத்திற்குச் சென்றதுமை மக்கள் பணியை ஆரம்பிக்கவும் மறைந்த சகோதர் ஆற்றிவந்த மக்கள் சேவையைத் தொடரவுமே. உறுப்பினர் பதவியில் எதுவித போட்டியும் இருக்கவில்லை. வரலாற்றின் புதியதோர் பயணத்தைத் தொடங்கிய அவர் போட்டியின்றியோ சனப் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் ஆனார். (1945.07.14.)
அமரசிங்க குடகல் ஆர...-
ஆரம்பத்ததலைவரும் ஆலோசகரும் சிங்கள - தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்

அதிலிருந்து நான்கு மாதங்கள் கடந்தபின்னர் (1945.11.18) தினத்தன்று டி.ஏ.ராஜபக்ஷ தம்பதிகள் எதிர்பார்த்தவாறே புண்ணிய புத்திரர் ஒருவர் கிடைக்கபெற்றார். இலங்கையின் தேசிய கலாசாரத்தை ஒளியூட்டி புதிய நாகரீகமொன்றை உருவாக்க வழிவகுத்த மிஹிந்து தேரோ அவர்களை நினைத்து புதல்வருக்கு பெயர் வைக்கப்பட்டது. அவர் (பர்ஸி மஹேந்திர) மஹிந்த ராஜபக்ஷ என்பவரானார். இந்தப் புதல்வர், உறுப்பினர் ஒருவராகி தன்னாலும் நிறைவேற்ற முடியாதுபோன மீதி வேலைகளை நிறைவேறற சனப் பிரதிநிதிகள் சபைக்குச் செல்வதைக் காணும் அளவுக்கு டி.ஏ பாக்கியசாலியாக இருக்கவில்லை. அமைச்சராகி தந்தையாரின் குறையை நிரப்புவதைக் காணும் அளவுக்கு அம்மையாரும் பாக்கியசாலியாக இருக்கவில்லை. பிரதமர் ஆகியதைக் காணும் அளவுக்கு இவர்கள் இருவரோடு ஒரே சகோதரியாகிய ஜயந்தி ராஜபக்ஷ ஹெட்டியாராச்சி அம்மையாருத் கொடுத்துவைக்கவில்லை. இருந்தும் அவர் முற்றுமுழுதான் நிர்வாகத்தையும் பொறுப்பையும் கையேற்று முடிசூடா மன்னராவதைக் காண்பதற்கு இலங்கையுடன் முற்போக்குவாதி உலகே எதிர்பார்த்தலுடன் விழிப்பாக இருந்தது. டி.ஏ. இரண்டு தசாப்தங்களுக்கு கிட்டிய காலம் வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைமூலமும் அதிலிருந்து வேறுபட்ட சமூகப் பணியின் மூலமும் கிருவாபற்றுக்கு தன்னிகரற்றதொரு சேவையை ஆற்றினார்.

படிப்பறிவின்மையிலிருந்து மீட்பதற்காக புதிய பாடசாலைகளை அமைத்து ஆசிரியர்களை நியமித்து கல்வியை உயர்வடையச் செய்தல், வறுமையைப் போக்குவதற்கான உணவு வகைகளை மலிவாக்கல், பயிர்ச்செய்கையை முன்னேற்றுதல், மரக்கறிவகை மற்றும் பழவகைகளினால் தன்னிறைவடையச் செய்தல் போன்றவற்றை பல முறைகளினால் செயற்படுத்தினார். கையில் மடியில் பணம் புழங்குவதற்காக வாழை, தென்னை, கமுகு, எண்ணெய்ப்புல், கறுவா, மிளகு மற்றும் பருத்தி போன்ற செய்கைகளை விஸ்தரித்தார். ஊக்குவித்தார், தேக்கு, மஹோகனி போன்ற மரச் செய்கைகளைச் செய்வித்தார். காணி இல்லாதோருக்கு காணிகளை வழங்கினார். அந்தக் காலத்தில் கூடுதலான காணிகள் அரசாங்கக் காணிகளாகவே இருந்தது. விறகு வெட்ட காட்டில் நுழைவதுகூட தடைசெய்யப்பட்டிருந்தது. அந்நிலைமையைத் தவிர்த்து செய்கை பண்ணுவதற்காக காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கைத்தறி நெசவுக் கைத்தொழில் உளளகக் கைத்தொழிலாக முன்னெடுக்கப்பட்டது. தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு பொருட்களைத் தயாரித்தல், கத்திகள், கோடாரிகள் முதலிய வீட்டுத் தேவைகளைத் தயாரித்தல் போன்ற தொழில்களை மதிக்கத்தக்க தொழில்களால மாற்றி விஸ்தரிக்கப்பட்டது. சிறிய குளங்கள் சார்ந்ததாக நீர்ப்பாசனத் திட்டங்களை ஏற்படுத்தி புதிய குடியேற்றக் கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. வீதிகளை மேம்படுத்தி போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தவும், வர்த்தக நிலையங்களை ஏற்படுத்தி மிகையை விற்பனை செய்யவும், தேவையான பொருட்களை இலகுவாகக்கொள்வனவு செய்யவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்தப் புதிய மாற்றியமைத்தல் செயல்முறையினால் ஊர் பூரித்தது. படிப்பறிவின்மையும் வறுமையும் சீக்கிரமாக நீங்கத் தொடங்கியது. தாழ்மை, மனிதாபிமானம், கருணை மற்றும் நற்சரிதை முதலிய குணாதிசயங்கள் நிறைந்த இச் சாதுவானவர் பிரதேசத்துக்கு ஆசியாக விளங்கினார். உறுப்பினராக இருந்த காலத்திலும், இராத காலத்திலும் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அவரை தமது பாதுகாவலராகவும் தலைவராகவும் வரவேற்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் திரு. பசில் ராஜபக்ஷ, திரு. சந்திர ராஜபக்ஷ மற்றும் டட்லி ராஜபக்ஷ (அமெரிக்க ஐக்கிய இராச்சியம்) ஆகிய ஆறு புதல்வர்களையும் மறைந்த ஜயந்தி ராஜபக்ஷ அம்மையார், சட்டத்தரணி பிரீதி ராஷபக்ஷ அம்மையார் மற்றும் சாந்தினி ராஜபக்ஷ அம்மையாரையும் மக்கள் சேவைக்காக உவந்தளித்த அவர் 1967.11.07 ஆம் திகதி இவ்வுலகைவிட்டுப் பிரிந்தார். அன்னார் மோட்சநிலை அடையவேண்டுமென பிரார்த்திப்போம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.