புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

மினி ஐஸ்கிறீம் டிரக்குகளை மேம்படுத்தும் எலிபன்ட் ஹவுஸ்

மினி ஐஸ்கிறீம் டிரக்குகளை மேம்படுத்தும் எலிபன்ட் ஹவுஸ்

ஆனமடுவ, அநுராதபுரம், கண்டி, புத்தளம் மற்றும் மாத்தறை பிரதேசங்களில் முறையே அந்தச் சமூகங்களைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் எலிபன்ட் ஹவுஸ் ஐஸ்கிaம் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எலிபன்ட் ஹவுஸ் உதவி வழங்கியதன் மூலம் சுயதொழில் புரிய ஆரம்பித்த இந்த இளைஞர்கள், தமது இருப்பிடங்களுக்கு அருகாமையில் எலிபன்ட் ஹவுஸ் உற்பத்திகள் அடங்கிய மினி ஐஸ்கிaம் டிரக்குகள் சகிதம் செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக ஆனமடுவ, அநுராதபுரம், கண்டி, புத்தளம், மாத்தறை அடங்கலாக நாடுபூராகவுமுள்ள சிறு சமூகங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவும் ஓர் முயற்சியாகவும் சிறிய மற்றும் சிறு கைத்தொழிற்துறை கலாசாரத்தினை வேரூன்றச் செய்வது மட்டுமல்லாது அதனை வளர்ச்சியுறச் செய்து சுய தொழில் வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்குவதற்கும் இந்த நிகழ்ச்சித் திட்டம் எலிபன்ட் ஹவுசின் தற்போதைய வேலைத்திட்டத்தின் ஓர் பகுதியாகவுள்ளது.

எலிபன்ட் ஹவுசின் ஃபுரோசன் இனிப்பு வகை உற்பத்திப் பகுதிகளின் தலைவரான நீல் சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், வீட்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சுயதொழில் வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு உற்பத்திகளின் தொடர் முயற்சிகள் யாவும் இலங்கை நிறுவனத்தினை அடையாளப்படுத்துவன வாகவுள்ளன. ஓர் உண்மையான இலங்கை நிறுவனம் என்ற வகையில் எலிபன்ட் ஹவுஸ் நிறுவனமானது நாடளாவிய ரீதியில் சிறிய மற்றும் சிறு தொழில் உற்பத்தியாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவதில் ஏற்கனவே ஓர் கருவியாக செயற்படுகின்றது என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.