புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

IHB

சிகையலங்கரிப்பாளர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்களுக்கான கல்வி நிறுவனத்தின் (IHB) ஒரு வருட நிறைவும் பட்டமளிப்பு விழாவும்

சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை துறையை தொழில்சார் ரீதியாக நிறுவனமயப்படுத்தவேண்டும் எனும் நோக்கில் 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே சிகையலங்கரிப்பாளர்கள் மற்றும் அழகுக்கலை நிபுணர்கள் கல்வி நிறுவகம் (OMC) ஆகும். உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் அங்கீகாரம் பெற்ற சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலைக் கற்கைநெறிகளையும் பரீட்சையையும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகியவற்றில் தமக்கு விரும்பிய ஏதேனும் மொழிகளில் தொடர்வதற்கான வாய்ப்பை (OMC) மாணவர்களுக்கு வழங்குகின்றது.

OMC வழங்கும் கற்கைநெறிகள் மாணவர்களுக்குத் தொழில்சார் தகைமையை மட்டுமன்றி பாதுகாப்பு, சுகாதாரம், தனிப்பட்ட திறமைகளை வளர்த்தெடுத்தல், அலங்கார நிலையத்திற்கு வாடிக்கையாள்களை வரவேற்கும் தன்மை, வழங்கும் சேவைகளை விரிவுபடுத்தும் நுணுக்கம் ஆகிய துணைவிடயங்களையும் கற்றுக்கொடுக்கின்றது.

இதன்மூலம் மாணவர்கள் சர்வதேசத் தரத்திற்கீடான பூரணத்துவமான கல்வித் தகைமையைக் கற்றுக்கொள்ள முடிகின்றது. உலக சிகையலங்களாரிப்பாளர்கள் சம்மேளனத்தின் (லிணிவி) அங்கீகாரம் பெற்ற இக்கல்வி நிறுவகம், தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதை உத்தரவாதம் செய்யும் உயர்தரப் பயிற்சியை வழங்குவதன் மூலம் தொழில் நிர்வாகத்தில் உயர்தரச் சான்றிதழ் பயிற்சிநெறியைத் தொடர்வதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றது. லிணிவி யின் அங்கீகாரம் பெற்ற OMC யின் சான்றிதழ்களில் லிணிவி யின் இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கும்.

லிணிவி வழங்கும் வெண்கல, வெள்ளி மற்றும் தங்க டிப்ளோமா கற்கை நெறிகளை OMC வழங்குகின்றது. வெண்கல டிப்ளோமா கற்கை நெறியில் மாணவர்கள் இயற்கையுடன் ஒன்றித்த படைப்புத்திறனையும் வெள்ளி டிப்ளோமாவில் ஆண்கள் மற்றும் பெண்களுடைய சிகையலங்கார நுட்பங்களையும் தங்க டிப்ளோடாவில் சிகையலங்காரம், ஒப்பனையலங்காரம் மற்றும் புகைப்படக்கலை தொடர்பான அனைத்து விடயங்களையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலையில் தேர்ச்சி பெற்ற இந்த மாணவர்களுக்கு மேலதிகமாக இத்துறையில் நவீன பயிற்சிகளைப் பெற்ற 14 பயிற்றுவிப்பாளர்களுக்கு 2013 - 2014 ஆம் ஆண்டுக்கான லிணிவி அங்கீகாரம் பெற்ற தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.