புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

லிப்டன் தேயிலை ரகங்கள் அறிமுகம்

லிப்டன் தேயிலை ரகங்கள் அறிமுகம்

உலகின் முதற்தர தேயிலை வர்த்தக நாமமான லிப்டன், தனது உற்பத்தி தொகுதியில் புதிய சுவை சேர்க்கப்பட்ட தேயிலை ரகத்தை அறிமுகப்படுத்தி இலங்கையில் புதிய மைல்கல்லை நிலைநாட்டியுள்ளது. அண்மையில் நடைபெற்ற இந்தப் புதிய ரகங்களின் அறிமுக நிகழ்வில் லிப்டன் வர்த்தக நாமமானது கருப்புத் தேயிலை ரகத்தை சேர்ந்த ஏர்ல்ஸ் க்றே இங்கிலீஸ் ப்ரெக்ஃபாஸ்ட் மற்றும் லெமன் சுவைகளை கொண்ட தேயிலை ரகங்களை வெளியிட்டிருந்தது. மேலும் இந்நிகழ்வில், புதிய பொதியுடலுடன் கூடிய புதிய பச்சைத்தேயிலை ரகத்தைச் சேர்ந்த மின்ட், சிட்ரஸ் மற்றும் ஜாஸ்மின், பியோர் போன்ற தேயிலை ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.

ஆரோக்கியமான மற்றும் “பருகச் சிறந்த பானம்” என்ற ரீதியில் நம் நாட்டு தேநீரை விரும்பும் மக்களுக்கு ஏற்ற விதத்தில் இப்புதிய தேயிலை ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

லிப்டன் தேயிலையின் விசேடத்துவம், 1890 ஆம் ஆண்டு முதல் ஆரம்பமாகி சுமார் ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக புகழ்பெற்ற வர்த்தக நாமமாக திகழ்ந்து வருவதுடன் தற்போது உட்புகுத்தப்படும் நவீனமயமாக்கலின் மூலம் புதிய தயாரிப்புகளையும் வாடிக்கையாளர்களுக்காக வழங்கி வருகிற சேர். தோமஸ் லிப்டன் என்பவர் இலங்கையில் “தேநீர் மரபு” குறித்து கண்டறிந்ததை தொடர்ந்து, அனைவரையும் சென்றடையக் கூடிய வகையிலும், சகாய விலையிலும் மற்றும் உயர் தரம் போன்ற குண அம்சங்களை கொண்ட தேயிலையை வழங்குவதை குறித்கோளாக கொண்டு செயற்பட்டார்.

இலங்கை தேநீர் விரும்பிகளின் விருப்பத்திற்குரிய புதிய சுவைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னரே லிப்டன் வர்த்தக நாமமானது புதிய தேநீர் ரகங்களை உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந் நிகழ்வின் போது யுனிலீவர் நிறுவனத்தின் தேயிலை பிரிவின் தலைவர் மனின்திரி பண்டாராநாயக்க கருத்து தெரிவிக்கையில் “உலகின் முதற்தர தேநீர் வர்த்த நாமமான லிப்டனானது தேநீர் விரும்பிகளுக்கு சிறந்த புத்துணர்வுமிக்க தேநீஞ் அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் எண்ணத்தில் புதிய தேநீர் ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது” என்றார். யூனிரிவரின் சந்தைப் படுத்தில் பணிப்பாளர் அரங்க ரணசங்கு குறிப்பிட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.