புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

இலங்கையில் மென்பொருள் பொறியியல் பிரிவை விஸ்தரிக்கும் CAMBIO

இலங்கையில் மென்பொருள் பொறியியல் பிரிவை விஸ்தரிக்கும் CAMBIO

சுவீடனில் பாரிய சுகாதார பராமரிப்புத் திட்ட வழங்குநர்களில் ஒன்றான CAMBIO Healthcare systems இலங்கையில் ஆராய்ச்சி, அபிவிருத்தி நிலையம் ஒன்றை நிறுவியுள்ளது. தற்போது நோர்டிக் (ஸ்கன்டிநேவியா, பின்லாந்து, ஐஸ்லாந்து) பிராந்தியத்தில் முன்னணி சுகாதார பராமரிப்புத் திட்ட வழங்குநராக விளங்கும் நோக்கத்துடன் மேலும் வியாபிப்பதற்கு கம்பனி முயற்சி செய்து வருகிறது.

அண்ணளவாக 85,000 அனுமதிப்பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் CAMBIO Healthcare system சந்தையில் மிகப்பெரும் மின்னணு-சுகாதார வழங்குநராக திகழ்கிறது. வைத்தியர்கள், தாதிமார், நிருவாக உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஐரோப்பா முழுவதிலும் வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள், மருத்துவ நிலையங்கள், விசேட பிரிவுகள் ஆகியவற்றில் தினமும் Cambio COSMIC மென்பொருட்களையே பயன்படுத்துகிறார்கள் என்று Cambio software systems srilanka அதிபர் தாஷன ஜயவர்தன தெரிவித்தார். ஒருவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தனித்துவமான பராமரிப்பை வழங்கக்கூடிய சுகாதார பராமரிப்பு தீர்வுகளை உருவாக்குவதே Cambio வின் நோக்கமாகும். இவ்விதமாக, சுகாதார பராமரிப்பு முறைமைகளின் தொழிற்பாடு மனித சரீரத்தைப் போன்றே சிக்கலானதாகவும் தொடர்ச்சியாக விரிவடைந்து வருவதாகவும் இருப்பதுடன் புதிய தொழில்நுட்பங்களின் உதவிகள், ஒத்தாசைகளுடன் விசேடமாக கையடக்க மற்றும் மடிக்கணனித் துறைகளால் முன்னேற்றம் அடைந்ததாகவும் இருக்கிறது. இன்று Cambio விலிஷிணியிவி ஆனது நோயாளர் நிர்வாகத்திலும் மருத்துவ சுகாதார உதவி நல்குதலிலும் ஒரு முழுமையான ஒருங்கிணைந்த தொழிற்பாடுகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இவை எங்கு பயன்படுத்தப்படினும் அவை Cambio COSMIC இன் உயரிய நோக்கமான நோயாளர் பாதுகாப்பு மற்றும் தனித்துவம் மிக்க மருத்துவ பராமரிப்பு எனும் அடிப்படையிலேயே தொழிற்படுகின்றன. யிஷிலி 9001 சான்றிதழைக் கொண்டுள்ள Cambio வின் வடிவமைப்பான மேடை அடிப்படையிலான பகிரங்க முறைமைகள், பொது இடைமுகங்கள், தரம்வாய்ந்த தீர்வுகள் ஆகியன உயர்தரம், அதிக திறமைவாய்ந்த மருத்துவ சேவைகள், சுகாதார பராமரிப்பில் குறுகிய நேர சேவைகள், கூடுதலான நோயாளர் பங்களிப்பு, குறைந்த படிமுறைகள் மற்றும் பராமரிப்பு செலவினங்கள் போன்ற முக்கிய வாடிக்கையாளர் அனுகூலங்களைத் தருகின்றன.

இலங்கையில் வளர்ந்துவரும் மென்பொருள் பொறியியல் நிறுவனம் என்ற வகையில் Cambio தொழில் வழங்கல், அந்நிய செலாவணி வருமானம் ஆகியவற்றின் மூலம் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்கனவே பெரும் பங்கை ஆற்றியுள்ளது என்று தெரிவித்த திரு. ஜயவர்தன மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மென்பொருள் பொறியியலாளர்களுடன் 2005ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கம்பனி தற்போது விரிவடைந்து 200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது என்று கூறினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.