புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

கொக்கா கோலாவின் இலங்கைக்கான மனிதவள முகாமையாளருக்கு விருது

கொக்கா கோலாவின் இலங்கைக்கான மனிதவள முகாமையாளருக்கு விருது

கொக்கா கோலாவின் இலங்கைக்கான மனிதவள முகாமையாளர், கடந்த 2012 செப்டெம்பர் 6ம் திகதி இந்தியாவின் பங்களூரில் நடைபெற்ற ஆசிய பசுபிக் மனிதவள (எச்.ஆர்.எம்) காங்கிரஸில் மனிதவள தலைமைத்துவ விருதினைப் பெற்றுக்கொண்டார். கொக்கா கோலா பெவரேஜஸ் ஸ்ரீலங்காவின், இலங்கைக்கான மனித வள முகாமையாளரான நிலந்தி ஜயதிலக்கவே இலங்கையின் மனித வளத்துறைக்குப் புரிந்த சேவைகளுக்காவும், கொக்கா கோலா பணியாளர்களுக்கிடையில், மிகச்சிறந்த நடைமுறைகளை உருவாக்கி, வேலைத்தள வாழ்க்கைச் சமநிலையை மேம்படுத்தியமைக்காகவும், குறித்த அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார். இந்த விருதானது, மனித வளத்துறையில், மிகுந்த சிறப்பான அங்கீகாரத்தை அளிக்கும் தராதரமாகக் கருதப்படுகின்றது.

கொக்கா கோலா பெவரேஜஸ் ஸ்ரீ லங்காவிற்கான தேச முகாமையாளர் செளமிந்ர பட்டாச்சார்யா இது குறித்துக் கூறுகையில், கொக்கா கோலா, ஆசிய பசுபிக் பிராந்தியம் முழுவதிலும் முதன்மையான விருதாகக் கருதப்படும் இந்த விருதினை இலங்கைக்கான மனித வள முகாமையாளர் நிலந்தி ஜயதிலக்க பெற்றக்கொண்டமை குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது. அவரது சாதனைகள் குறித்து பெருமையுறும் அதேநேரம், மனித வளத்துறையை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளுக்கு எமது பாராட்டுதல்களையும் தெரிவிக்கின்றோம். நிலந்தி பணியாளர்களுக்கு அனுகூலமளிக்கும் மிகச் சிறந்த நடைமுறைகளை உருவாக்கும் வகையில் அதிகம் பாடுபட்டுள்ளதுடன் வேலைத்தளத்தில் மிகச்சிறந்த சுற்றுச்சூழலையும் அளித்துள்ளார். மனித வள நடைமுறைகள் நிறுவனத்திற்கு அளிக்கும் பங்களிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை இதுபோன்ற விருதுகள் அங்கீகரிக்கின்றமை மிகச் சிறப்பானதாகும் என்றார்.

ஏஷியா பசுபிக் எச்.ஆர்.எம் காங்கிரஸ் விருதுகளுக்கான தெரிவுகளின்போது கடுமையான தேர்ந்தெடுத்தல் செயற்பாட்டை, ஆசியாவின் பல பிராந்தியங்களைச் சேர்ந்த சுயாதீன சர்வதேச ஆராய்ச்சி குழு ஒன்றின் ஊடாக முன்னெடுக்கின்றது. குறித்த விருதுகளானது, விண்ணப்பதாரின் மூலோபாய வணிக முன்னோக்கு, வணிக இலக்கு முகாமைத்துவம், இடர் மற்றும் மாற்றங்களை முகாமை செய்தல், குழுவை நோக்கிய சார்புநிலை மற்றும் ஆள் முகாமைத்தும், வலையமைப்புத் திறன்கள், வாடிக்கையாளர் மீதான நோக்கு, செயற்திறன் முகாமைத்துவம் போன்ற பல்வேறு திறன் தொகுப்புகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.