புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

நூடில்ஸில் அல்லி வழங்கும் தொழில்நுட்ப புரட்சி

நூடில்ஸில் அல்லி வழங்கும் தொழில்நுட்ப புரட்சி

இல்லத்தரசிகளினதும் சகல வகையான நுகர்வோரினதும் நம்பிக்கைக்குரிய உணவாகியுள்ளது அல்லி நூடில்ஸ். சந்தையில் அல்லி முன்னணி வகிப்பதற்கான காரணம் உண்மையில் அவர்கள் எப்பொழுதும் நிறைவான சுகாதார தரத்துடன் உயர் தரத்திலான உற்பத்திகளை தயாரிக்கிறார்கள். அல்லி உற்பத்திகள் அனைத்திலும் முன்னணியில் விளங்குவது அல்லி நூடில்ஸாகும். இலங்கையில் நூடில்ஸ் உற்பத்திச் சந்தையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்திய அல்லி ஸ்தாபனம் தன்னியக்க, 100-சதவீதம் சுகாதாரமான நூடில்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவியுள்ளது. இப்பொழுது, ரசனைக்கு சுவையூட்டும் அல்லி நூடில்ஸை சுவைப்பதற்கான அரிய சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த வகையான அல்லி நூடில்ஸ்கள் பாரம்பரிய உற்பத்தி முறைகளை கைவிட்டு சீன தொழில்நுட்பத்தில் கணினி அடிப்படையில் இயந்திர சாதனங்களின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றது.

100 சதவீதம் சுகாதாரமானது என்று சான்றிதழ்படுத்தப்பட்ட அல்லி நூடில்ஸ் ஏனைய சகல வகையான நூடில்ஸ்களிலும் பார்க்க உயர்ந்த தரமானதாக விளங்குகின்றன. இன்று இலங்கையின் பிரபல ஹொட்டேல்கள், உணவகங்கள், பிரபல ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றில் அல்லி நூடில்ஸ் 3 வகைகளாக விநியோகிக்கப்படுகின்றன. அவை உலர்ந்த நூடில்ஸ், ஸ்டிக் (Stick) நூடில்ஸ், வொக் (wok) நூடில்ஸ் என்பனவாம். அல்லி நூடில்ஸ்களை சகல சுப்பர் மார்க்கட்டுகள, மொத்த விற்பனை நிலையங்கள், முன்னணி விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளலாம். நாடுதழுவிய விநியோக வலையமைப்பை பயன்படுத்தி நாடெங்கிலும் அல்லி நூடில்ஸ் விநியோகிக்கப்படுகின்றன. உயர் உற்பத்தி தரங்கள், நுட்பமான நவீன தொழில்நுட்பம் ஆகியன உற்பத்தி நடைமுறைகளில் பயன்படுத்தப்படுவதால் அல்லி வர்த்தக குறி நூடில்ஸ்கள் உலகையே வெற்றி கொண்டுள்ளன. தென் கொரியா, நியூஸிலாந்து, நோர்வே, குவைத், பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் அல்லி நூடில்ஸிற்கு ஏற்பட்டுள்ள பெரும் கிராக்கியும் மகத்தான வரவேற்புமே இதற்கு சான்றாகும்.

Alli (Pvt)Company ஒரு குடும்ப வர்த்தகமாக ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டது. இன்று அது 350 ஊழியர்களுடன் ஒரு பரந்த தொழில் ஸ்தாபனமாக விரிவடைந்துள்ளது. உள்ளூர் சந்தைகளை வெற்றி கொண்ட அல்லி தற்போது வெளிநாட்டு சந்தைகளையும் வெற்றி கொள்ள ஆரம்பித்துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.