புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

வேகமாக வளர்ந்துவரும் Carmart

வேகமாக வளர்ந்துவரும் Carmart

நடப்பு நிதியாண்டில் 400 சதவீத விற்பனை அதிகரிப்பைப் பெற்றுள்ள Carmart எதிர்வரும் ஆண்டில் மேலும் 100 சதவீத அதிகரிப்பு ஏற்படுமென இலக்கு வைத்துள்ளது. இலங்கையில் ஏக Peugeot விநியோகஸ்தர்களான Carmart இன்று சந்தையில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துக்கொண்டு மிகுந்த பன்முக உற்பத்தி வகையறாக்களுடனும் அதன் வியாபார உத்திகள், நடைமுறைகள், உட்கட்டமைப்பு ஆகியவற்றில் பாரிய மாற்றங்களுடனும் எதிர்வரும் ஆண்டில் தீவிர விஸ்தரிப்புக்கும் தன்னை தயாராக்கி வருகிறது.

கடந்த வருடம் Peugeot 508 executive saloon, the 3008 crossover SUV, and the RCZ sports coupe போன்ற பிரபல்யம்வாய்ந்த மாதிரிகளை அறிமுகம் செய்து அவை அனைத்திற்கும் வாடிக்கையாளரின் பெருவரவேற்பைப் பெற்ற Carmart மேலும் சிக்கனமான உற்பத்திகளை வழங்குவதன் மூலம் அதன் வாடிக்கையாளர்கள் தளத்தை விஸ்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அண்மையில் 207 sedan ஐ அறிமுகம் செய்ததை அடுத்து நவம்பர் மாதத்தில் Peugeot 408 வெளிவர இருக்கிறது.

Carmart பிரதம நிறைவேற்று அதிகாரி யசேந்திரா அமரசிங்க கருத்து தெரிவிக்கையில், Peugeot வினால் சில உன்னதமான வாகன மாதிரிகள் அறிமுகம் செய்யப்படும் நிலையில் எங்கள் வளர்ச்சி இதுவரையில் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து பேணுவதற்காக எதிர்மாறானதும் மிக மோசமானதுமான சந்தை நிலைமைகளுக்கு மத்தியிலும் எங்கள் வாடிக்கையாளர் சேவையிலும் உட்கட்டமைப்பிலும் நாம் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்று கூறினார்.

Carmart சந்தையில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துள்ளது என்றும் Peugeot வின் தனிப்பண்பு உத்தி பாணியிலும் தரத்திலும் தொழில்நுட்பத்திலும் ஒவ்வொரு உற்பத்தியின் புதுமையிலும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்துடன் சந்தையில் உயர்வடைந்து காணப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

Peugeot வின் ‘நகர்வும் உணர்வும்’ என்ற உற்பத்தி சுலோகம் அவற்றின் உரிமையாளர்களுடன் உணர்வுபூர்வமாகப் பேசும் இந்த மாதிரிகளுடன் விசுவாசமாக உள்ளது. சுருங்கக் கூறின் இவை தீவிர உணர்வுபூர்வமான மக்களுக்குரிய கார்களாகும். கார்களில் பெருவிருப்பம் கொண்டவர்கள் என்பதல்ல. ஸ்டைலில், செய்பொறிகளில் அல்லது சூழலிலாயினும் நாட்டம் உள்ளவர்களுக்கு இது உகந்ததாகும். என்றும் அமரசிங்க தெரிவித்தார்.

அதிகரித்த தராதரம் தங்கள் சேவைகளில் பிரதிபலிக்க வேண்டும் என்றும் விற்பனைக்கு முன்னரோ அல்லது விற்பனையின் பின்னரோ வாடிக்கையாளர்கள் தங்களிடம் முதல்முதல் வரும்போதே அவர்களுக்கு அதிசிறந்த அனுபவம் ஏற்படக்கூடியதாக தாங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சாதகமான மனப்போக்கு, உள்ளக நடைமுறையை விருத்தி செய்வதற்கு முயற்சி எடுத்தல் ஆகியன குறித்து தாங்கள் முக்கிய கவனம் எடுத்து வருவதாகவும் அமரசிங்க தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.