புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

இ-சுவாபிமானி விருதுக்கு ஆக்கங் கோரல்;;விண்ணப்பங்கள் இம்மாதம் 25வரை ஏற்றுக் கொள்ளப்படும்

இ-சுவாபிமானி விருதுக்கு ஆக்கங் கோரல்;;விண்ணப்பங்கள் இம்மாதம் 25வரை ஏற்றுக் கொள்ளப்படும்

இக்டா - வரவேற்கும் இ- சுவாபிமானி விருது வழங்கலுக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. தேசிய மட்டத்திலான ஆக்கபூர்வ, இலக்கமுறை அல்லது டிஜிட்டல் பிரயோகங்களை அடையாளங் காண்பதும், மெச்சுவதும் இதன் நோக்கமாகும் என்று இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் கூறுகிறது. விருது வழங்கும் நிகழ்வை தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (இக்டா) ஒழுங்கு செய்துள்ளது. இ- அரசாங்கம் மற்றும் நிறுவனங்கள், இ- சுகாதாரம் மற்றும் சுற்றாடல், இ- கற்றல் மற்றும் கல்வி, இ- பொழுதுபோக்கு மற்றும் விளையாடல், இ- பண்பாடு மற்றும் மரபுரிமை , இ- விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், இ- வர்த்தகம் மற்றும் வாணிபம், இ- உட்சேர்க்கை மற்றும் பங்குபற்றல், எம்- உள்ளடக்கம் (கையடக்கத் தொலைபேசி உள்ளடக்கம்) ஆகிய துறைகளுக்கும் கீழ் விண்ணப்பதாரர்களுக்குத் தங்கள் இலக்கமுறை அல்லது டிஜிட்டல் ஆக்கங்களை அல்லது பிரயோக உள்ளடக்கங்களைச் சமர்பிக்கலாம். www.eswabhimani.lk, www.facebook.com/eswabhimani  என்ற இணையத்தளம் அல்லது பேஸ்புக் ஊடாக மேலதிக விபரங்களை அறிந்துகொள்ளலாம். அத்துடன் ஒரு விண்ணப்பப்படிவத்தையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாள் 2012 ஒக்டோபர் 25 திகதியாகும். 0112369099 நீடிப்பு 314 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் [email protected]  மின்னஞ்சல் முகவரியூடாகவும் தொடர்புகொள்வதன் மூலமும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.