புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

தகவல் தொழில்நுட்பத்தில் ஸ்ரீ லங்கனுக்கு மற்றுமொரு விருது

தகவல் தொழில்நுட்பத்தில் ஸ்ரீ லங்கனுக்கு மற்றுமொரு விருது

மென்பொருள் மேம்பாட்டில், தர முகாமைத்துவ முறைமை களுக்காக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ISO 9001:2008 விருது வழங்கிக் கெளரவிக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ¥க்கு மற்றுமொரு சர்வதேச தர விருது கிடைத்திரு க்கிறது.

இது பற்றி ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் தலைவர் நிஷாந்த ரணதுங்க கருத்துத் தெரிவிக்கையில், சர்வதேச தரங்களுக்கேற்ப அதன் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் ஸ்ரீலங்கன் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. ISO தரச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றமை இலங்கையின் விமான சேவைத்துறையை மேலும் பலப்படுத்துவதற்கு உதவும் என்று நம்புகின்றோம் என்றார். தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு முறைமைகளுக்காக, அதன் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, ISO/IEC 27001:2005தரச் சான்றிதழை கடந்த வருடம் பெற்றது.

எமது எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கிவரும் சேவைகளில் பன்முகப்படுத்தப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்திவரும் இத்தருணத்தில், மற்றுமொரு தரச்சான்றிதழ் கிடைத்திருப்பதானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. ISO தரச் சான்றிதழ் கிடைத்திருப்பதானது, எங்கள் மென்பொருள் மேம்பாடு சர்வதேச தரத்துக் கமைவானதாக இருப்பதையே சுட்டிக்காட்டுகின்றது என்றார் ஸ்ரீலங்கனின் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன.

ISO 9001:2008 அங்கீகாரம், விமானசேவைத்துறையில் தொழில்நுட்பம் மிகவேகமாக மாறிவருவதற்குச் சான்றாக உள்ளது என்று, ஸ்ரீ லங்கனின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர், கமல் நாணயக்கார தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.