புத் 64 இல. 29

நந்தன வருடம் ஆனி மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 25

SUNDAY JULY 15 2012

 

சுயரூபக் கோவை

சுயரூபக் கோவை

பெயர் - முத்துவேல் கருணாநிதி

வயது - ரொம்ப ரொம்ப ஓவர்

தொழில் - ஓய்வெடுத்த நிலையிலேய

அரசியல் செய்வது

உண்மையான தொழில் - நல்ல கலைஞன், நயம் மிக்க கவிஞன்,

சிறந்த கதை எழுத்தாளன்

சைட் பிஸ்னஸ் - குடும்ப உறவுகளுக்காக எப்படி சொத்துச் சேர்ப்பது எனத் திட்டமிடுவது

பொழுது போக்கு - முத்திரை சேகரித்தல், காட்டூன் பார்த்தல் அல்ல

அதிகம் ரசிப்பது - ஜெயலலிதா விடும் சலிக்காத அறிக்கைகள்

அசைக்க முடியாத பலம் - இரண்டு மனைவியர் மூலமாக வந்த பரந்து விரிந்துள்ள உறவுகள்

அசைக்கக் கூடிய பலம் - சொத்துக்காகச் சண்டையிடும் புத்திரர்களும் பேரப்பிள்ளைகளும்

எதிர்பார்ப்பு - உலகம் அழியும்வரை முடிந்தால் அழிந்த பின்னரும் உலகத் தமிழருக்குத்தலைவர் என்று பிறர் கூறுவது

நண்பர்கள் - முன்னர் எம்.ஜி. ஆர், இப்போது நடிகர் விஜய்

எதிரிகள் - தனக்குச் சவாலாக வரும் இந்திய உலகத் தமிழ்த் தலைவர்கள்

(அண்மையில் அப்துல் கலாம்)

மறந்தது - இலங்கைத் தமிழர்களின் உண்மையான பிரச்சினையை

மறக்காதது - விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரை

தவறவிட்டது - புலிகளின் தலைவர் மறைவிற்கு கவிதை எழுதுவதை

நிறைவேறாதிருக்கும் ஆசை - இந்தியப் பிரதமர் பதவி

மிகவும் பிடித்தது - நண்டுச் சதையும் கோழிக் கால் வளைவும்

அரசியல் எதிரிகள் - தன்னுடன் கூட்டணி அமைக்க வந்துவிட்டு ஜெயலலிதா பக்கம் செல்வோர்

அதிக மரியாதை வைத்திருப்பது - முன்னாள் பிரதமர் வாஜ்பேய்

மனம் வெதும்பும் சந்தர்ப்பங்கள் - கவிதை எழுதும்போது பேனாவில் மை தீர்வது

எதிர்கால இலட்சியம் - இளமையாகத் திரும்ப இன்ப வைத்தியம் செய்வது

கோபம் கொண்டது - சு. ப. தமிழ்ச் செல்வன் மறைவிற்கு எழுதிய கவிதையை

சிலர் விமர்சனம் செய்வது

எதிர்பார்த்துக் கொண்டிருப்பது - காலனின் வருகையை???

எதிர்பாராத இலட்சியம் - ஈழத் தமிழருக்கு விடிவு வருவது

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.