ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 

எபோலா வைரஸ் கொங்கோ நாட்டிற்கும் பரவியது

எபோலா வைரஸ் கொங்கோ நாட்டிற்கும் பரவியது

மற்றொரு ஆபிரிக்க நடான கொங்கோ ஜனநாயக குடியரசி லும் ஆட்கொல்லி எபோலா நோய் அடையாளம் காணப்பட் டுள்ளது. இதன்மூலம் எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக் கும் ஆபிரிக்க நாடுகளின் எண் ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

வடக்கு கொங்கோவின் இக் வன்டியுர் மாகாணத்தில் இருவர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானதாக அந்நாட்;டின் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உற வினர்களான இருவரும் நோய் காரணமாக கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்கு ஆபிரிக்காவை பாதித்திருக்கும் எபோலா வைரஸினால் இதுவரை 1,427 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள் ளது. இதில் கினியா, லைபீரியா, நைஜPரியா மற்றும் சியரலியோன் ஆகிய நாடுகளே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் லைபீரியாவி லேயே அதிகம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

1976 ஆம் ஆண்டு எபோலா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது தொடக்கம் கொங்கோ நாட்டை அது பாதிப்பது இது ஏழாவது தடவை என்பது குறிப் பிடத்தக்கது.

இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத எபோலா வைரஸ் நோய் தொற்றி யவரின் உடல் திரவங்கள் மூலம் ஏனையோருக்கு நோய் பரவுகிறது. உல கின் மிக பயங்கரமான உயிர்கொல்லி வைரஸ்களில் ஒன்றாக அடையா ளப்படுத்தப்பட்டிருக்கும் எபோலா வைரஸ் தொற்றியவர்களில் 70 வீதத்திற் கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி