ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 

பிரான்ஸ் அரசுக்குள் குழப்பம்: பிரதமர் திடீர் இராஜpனாமா

பிரான்ஸ் அரசுக்குள் குழப்பம்: பிரதமர் திடீர் இராஜpனாமா

பிரான்ஸில் ஏற்பட்டிருக்கும் அரசி யல் குழப்பத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் மனுவெல் வோல்ஸ் அரசின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டேவிடம் நேற்று சமர்ப்பித்தார். எனினும் புதிய அரசை அமைக்கும்படி வோல்ஸிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.

பிரான்ஸ் அரசின் பொருளாதார கொள்கை குறித்து அந்நாட்டின் பொரு ளாதார அமைச்சரான ஆர்னோட் மொடர் பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமர்சனம் வெளியிட்டதை அடுத்து அரசுக்குள் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் பிரதமர் வோல்ஸ் பதவி விலகியதை அடுத்து ஜனாதிபதி ஹொலன்டே வெளியிட்ட அறிவிப்பில், "நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டுசெல்லும்" புதிய அமைச்சரவையை நிறுவ வோல் ஸிடம் கோரப்பட்டது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

பொருளாதார அமைச்சர் எல்லை மீறி இருப்பதாக பிரதமர் குற்றம் சுமத் தியுள்ளார். அரசு முன்னெடுக்கும் சிக் கன நடவடிக்கை நாட்டை சிக்கலுக் குள்ளாக்கி இருப்பதாக பொருளாதார அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். பொருளாதார அமைச்சரின் கூற்றுக்கு கல்வி மற்றும் கலாசார அமைச்சர் களும் ஆதவரளித்துள்ளனர்.

பிரான்ஸ் உள்ளுர் தேர்தலில் ஜனாதிபதி ஹொலன் டேவின் சோசலிச கட்சி பின்னடைவை சந்தித்ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் மனுவெல் வோல்ஸ் பிரத மராக நியமிக்கப்பட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி