ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 

மத்திய பிரதேசத்தில் அமாவாசை பு+iஜ நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் அமாவாசை பு+iஜ நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

திங்கட்கிழமையில் வரும் அமாவாசை தினத்துக்கு 'சோமவார அமாவாசை'' என்று பெயர். இந்த அமாவாசை நாளில் சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் சித்ரகூட் என்ற கிராமத்தில் புகழ்பெற்ற காம்த்நாத் என்ற சிவாலயம் உள்ளது. இங்கு சோமவார அமாவாசை வழிபாடுகள் சிறப்பாக நடத்தப்படுவதுண்டு.

நேற்று அதிகாலை நடக்கும் பு+iஜயில் கலந்து கொள்வதற்காக மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் அந்த கோவிலில் திரண்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவே ஏராளமான பக்தர்கள் அதிகாலை பு+iஜக்காக வரிசையில் நின்று விட்டனர்.

நேற்று அதிகாலை அந்த கோவிலில் சோமவார அமாவாசை பு+iஜகள் தொடங்கியதும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றனர். அப்போது திடீரென பக்தர்களிடையே நெரிசல் ஏற்பட்டது.

நெரிசலில் பல பக்தர்கள் சிக்கி கீழே விழுந்தனர். அவர்கள் மீது மற்ற பக்தர்கள் ஏறி மிதித்து சென்றனர். இதற்கிடையே கடும் நெரிசல் காரணமாக சில பக்தர்கள் மயங்கி விழுந்தனர்.

கடும் போராட்டத்துக்கு பிறகே நெரிசல் தீர்ந்தது. அதன் பிறகு அந்த பகுதியில் பொலிஸாரும், அதிகாரிகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது நெரிசலில் சிக்கியவர்களில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதற்கிடையே நெரிசலில் சிக்கியவர்களில் சுமார் 60 பேர் காயங்களுடன் தவித்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் பலியானதைத் தொடர்ந்து கமதநாதர் ஆலயம் உடனடியாக மூடப்பட்டது. பிறகு பரிகார பு+iஜகள் செய்யப்பட்டன.

மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் விபத்து பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி