ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்களில் தொடர்புடையவர்களை பாதுகாக்க கணக்கு தணிக்கை அதிகாரிக்கு நெருக்கடி

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்களில் தொடர்புடையவர்களை பாதுகாக்க கணக்கு தணிக்கை அதிகாரிக்கு நெருக்கடி

முன்னாள் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் பரபரப்பு குற்றச்சாட்டு

'முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் நடந்த ஊழல்களில் தொடர்புடைய நபர்களை பாதுகாப்பதற்காக எனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது" என முன்னாள் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியான சி.ஏ.ஜp. வினோத் ராய் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய தலைமை கணக்கு அதிகாரியாக பதவி வகித்தவர் வினோத் ராய். இவரின் பதவிக் காலத்தில் தான் '2ஜp ஸ்பெக்ட்ரம்" ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்றவற்றில் நடந்த முறைகேடுகளும் அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளும் அம்பலத்துக்கு வந்தன. கடந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற வினோத் ராய், தன் பணிக் காலத்தில் நடந்த சம்பவங்களை தொகுத்து 'நொட் ஜஸ்ட் என் அக்கவுண்டன்ட்' என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விசயங்கள் குறித்து ஆங்கிலப் பத்திரிகைக்கு வினோத் ராய் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறி உள்ளதாவது: இந்த புத்தகத்தில் உண்மை யை மட்டுமே எழுதியுள்ளேன். உண்மையை எழுதினால் எதிர்காலத்தில் நிர்வாகம் சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக் கை தான் இதற்கு காரணம். எவருடைய புகழுக்கும் நற்பெயருக் கும் களங்கம் ஏற்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் தனக்குள்ள பொறுப்புக்களை தட்டிக் கழித்தார்.

அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவும் பொறுப்பு க்களில் இருந்து விலகி இருந்தார். கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்துவதற்காகவும் முறைகேடுகள் நடத்தப்பட்டன. அதிகாரத்து க்காக நிர்வாகம் தியாகம் செய்யப்பட்டது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆகிய வற்றில் நடந்த முறைகேடுகள் குறித்த அறிக்கையில் பிர பலங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த பெயர்களை நீக்கும் படி அரச தரப்பிலிருந்து, எனக்கு நெருக்கடி கொடுக்கப் பட்டது. என்னுடன் முன்பு பணியாற்றிய சக அதிகாரிகள் மூலமாக என்னை தொடர்பு கொண்ட ஐ.மு. கூட்டணி கட்சி களை சேர்ந்தவர்கள் பிரபலங்களின் பெயர்களை அறிக்கையில் இருந்து நீக்கும்படி நெருக்கடி கொடுத்தனர்.'இது போன்ற விசயங்களை எல்லாம் முன்பே கூறாமல், இப்போது கூறுவது ஏன்?" என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நான் வகித்த பதவி அரசியலமைப்பு சட்ட பதவி. அதில் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

ஆனால் இப்போது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதால் சுதந்திரமாக பல வி'யங்களை தெரிவிக்க முடியும். அதனால்தான் ஓய்வுக்கு பின் இந்த வி'யங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரூ, நிலக்கரி துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் ஆகியோர் எழுதிய புத்தகங்களில் ஐ.மு. கூட்டணி ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்தும் மன் மோகன் சிங், சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் களின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்து எழுதப் பட்டு இருந்தது. இந்நிலையில் வினோத் ராயின் புத்தகத்திலும் இதுபோன்ற விசயங்கள் இடம்பெற்றுள்ளன, இது காங்கிரஸ் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வினோத் ராயை சந்திக்க செய்தியாளர்கள் நேற்று முன்தினம் அவரின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் செய்தியாளர்களை

தேசிய அரசியலில் தன் 'பகீர்" குற்றச்சாட்டுகள் மூலம் பர பரப்பு தீயை பற்ற வைத்துள்ள வினோத் ராய், 66, உ.பி. மாநி லத்தைச் சேர்ந்தவர். 1972ம் ஆண்டு கேரள மாநில ஐ.ஏ.எஸ். கேடர் அதிகாரியாக பணியை துவக்கினார். திருச்சு+ர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய போது அந்த மாவட்டத்தின் வளர்ச்சி க்காக ஏராளமான திட்டங்களை தீட்டி மக்களின் பாராட்டுகளை பெற்றவர். அதன்பின் மத்திய அரசில், இராணுவம், வர்த்தகம், நிதித் துறை ஆகியவற்றில் முக்கிய பொறுப்புக்களை வகித்தார். இவர் சி.ஏ.ஜp.யாக பணியாற்றிய போது தான் '2ஜp ஸ்பெக்ட்ரம்", நிலக்கரி சுரங்கம் ஆகியவற்றின் ஒதுக்கீட்டில் நடந்த மெகா ஊழல்கள் அம்பலத்துக்கு வந்தன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி