ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடாக நடைபெற்றுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

1993ம் ஆண்டுக்குப் பின் நடந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு அனைத்துமே தன்னிச்சையானது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதுவரை நிலக்கரி எடுக்காத சுரங்கங்கள் உரிமம் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் வெளிப் படைத்தன்மை பின்பற்றப்படவில்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தேர்வுக்குழு மூலம் ஒதுக்கப்பட்ட அனைத்து சுரங்க ஒதுக்கீடுமே சட்டவிரோதமானதே என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்மோகன்சிங் தலைமையிலான கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்யப்பட்ட தாக புகார் எழுந்தது. சுரங்க ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடை பெற்றது. விசாரணையை வாஜ் பாய் ஆட்சி முதல் நடத்த நாடாளுமன்ற நிலைக்குழு நடவடிக்கை எடுத்தது. தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பால் பல்வேறு தனியார் சுரங்கங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி