ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 

பாக். அத்துமீறல்; குறித்து அவசர ஆலோசனை

பாக். அத்துமீறல்; குறித்து அவசர ஆலோசனை

இந்திய - பாகிஸ்தான் எல்லை பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரு கிறது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத்சிங் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் போக்கு குறித்து விவாதிக்கப்பட்டது. எல்லை பாதுகாப்பு படை டி. ஜp. ரா மற்றும் ஐ.பி. அதிகாரிகள் பங்கேற் றனர். நேற்றுக் காலை 40 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்கு தல் நடத்திய நேரத்தில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்திய- பாகிஸ்தான் எல்லையில் நேற்றும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்திய பாது காப்பு படையினரின் முகாம்கள் மீது துப்பாக்கிச்சு+டு நடத்தப்பட்டது.

இந்த மாதத்தில் பாகிஸ்தானின் அத்துமீறல் இது 17வது முறை ஆகும். நேற்று சம்பா மற்றும் அக் னூர் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்தது. எல்லையோர மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

பல இடங் களில் குண்டு தாக்கிய அடையாளம் காணப்படுகிறது. கால்நடைகள் இறந் துள்ளன. அப்பாவிகள் காயம் அடை ந்துள்ளனர். ஒமர் பாகிஸ் தான் எல்லை தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்வதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். இது தொட ர்பாக அவர் சட்டசபையில் பேசுகை யில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் தொடர்ந்து அவரால் பேச முடியாமல் போனது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி