ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

ஹிட்லர் பிரேசிலில் வாழ்ந்ததாக புதிய கூற்று

ஹிட்லர் பிரேசிலில் வாழ்ந்ததாக புதிய கூற்று

ஜெர்மன் சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லர் உயிர்தப்பி 1984ஆம் ஆண்டுவரை பிரேசிலில் வாழ்ந்ததாக புகைப்பட ஆதாரங்களுடன் பட்டப்பின்படிப்பை தொடரும் மாணவர் ஒருவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது உலகமகா யுத்தத்தில் ஜெர்மனி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 1945ஆம் ஆண்டு பெர்லினில் இருந்த நிலவரையில் வைத்து ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது. ஆனால் அவர் அங்கிருந்து உயிர்தப்பி பொலிவிய நாட்டு எல்லையில் இருக்கும் பிரேசிலின் சிறு கிராமம் ஒன்றில் 1984வரை உயிர் வாழ்ந்ததாக மேற்படி புத்தகம் குறிப் பிட்டுள்ளது.

இதன்போது ஹிட்லர் ஆர்ஜன்டினாவுக்கு தப்பிச்சென்று பின்னர் பரகுவாவினூடாக பிரேசிலில் குடியேறியிருப்பதாக அந்த புத்தகத்தை எழுதியவர் குறிப்பிடுகிறார். வத்திக்கானில் இருக்கும் நண்பர் மூலம் கிடைக்கப்பெற்ற புதையல் ரகசியத்தை தேடியே ஹிட்லர் பிரேஸிலுக்கு சென்றதாகவும் அந்த புத்தகம் குறிப்பிடுகிறது.

ரெனீ குர்ராரியோ டயஸ் என்ற மாணவியின் கூற்றின்படி ஹிட்லர் இறந்தது தனது 95 ஆவது வயதில் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிட்லர் தனது கடைசி காலத்தில் கட்டங்கா என்று அழைக்கப்படும் கறுப்பின காதலியுடன் வாழ்ந்ததாகவும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த கூற்றை பல வரலாற்றியலாளர் களும் நிராகரித்துள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி