ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

நடிகையுடன் தொடர்பு: காதலியை பிரிந்தார் ஹொலண்டே

நடிகையுடன் தொடர்பு: காதலியை பிரிந்தார் ஹொலண்டே

பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹொலண்டே தனது காதலி வாலெரி ட்ரையர் வெய்லரை பிரிவதாக அறிவித்துள்ளார். ஹொலண்டேக்கு வயது 59. மனைவி வாலெரிக்கு வயது 48 ஆகிறது. ஹொலண்டே ஏற்கனவே திருமணமாகி செகோலின் என்பவரை மணந்து பின்னர் விவகாரத்து பெற்றிருந்தார். அவர்களுக்கு 4 குழந்தைகள் இருந்தது தற்போது ஜனாதிபதி ஹொலண்டேயுடன் வாழ்ந்து வரும் காதலியும் 2 தடவை விவாகரத்து ஆனவர். இவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அந்நாட்டு நடிகையும், சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவாளருமான ஜூலி காயட்டுடன் (41) ஹொலண்டேவுக்கு தொடர்பு என ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட ட்ரையர் வெய்லர் 8 நாட்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

கடந்த வாரம் இது குறித்து அவர் பேட்டியில் கூறும்போது, இது என் தனிப்பட்ட விடயம் ஏன் ஊடகங்கள் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என கேள்வி எழுப்பினார். இந்த விடயத்தில் தொடர்ந்து மெளனம் காத்து வந்த ஜனாதிபதி ஹொலண்டே காதலி வாலெரி ட்ரையர் வெய்லரை விட்டு பிரிவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். பொருளாதார திட்டங்களை தொடங்கி வைப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஹொலண்டேயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு கேள்விகளை நிருபர்கள் எழுப்பியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி