ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

சீனாவின் நிலவு ஆய்வுகலத்தில் கோளாறு

சீனாவின் நிலவு ஆய்வுகலத்தில் கோளாறு

சீனா அனுப்பிய ஜாட் ரேபிட் என்ற ஆய்வுக் கலம் நிலவில் கடந்த டிசம்பர் மாதம் தரையிறங்கியது. ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த ஜாட் ரேபிட் சீனா நிலவுக்கு அனுப்பும் முதல் ஆய்வுக் கலம் ஆகும். நிலவின் வானவில் குடா பகுதியில் இந்த ஆய்வுக்கலம் தரையிறங்கி தனது ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது.

தற்போது இந்த ஆய்வு கலத்தில் இயந்திர கட்டுப்பாட்டில் கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலாவின் மேற்பரப்பு சூழலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த கோளாறு ஏற்பட்டதாக சீனாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிர்வாகம் இதை தெரிவித்து உள்ளது. மேலும் நிலவில் ஓர் இரவு என்பது பூமியில் 14 நாட்களாகும். அங்கு வெப்பநிலை 180 டிகிரிக்கும் கீழ் உள்ளது. சந்திரன் இரவில் சூரிய ஒளி இல்லாததால் ஜாட் தேபிட்டால் சக்தியை உற்பத்தி செய்து கொள்ள முடியவில்லை. ரோவா, அதன் ரேடார், பனோரமா கேமரா, ஒரு துகள் எக்ஸ்-கதிர் சாதனம் மற்றும் அகச் சிவப்பு படமெடுத்தல் கருவி மூலம் படங்கள் பெறப்படுகிறது என கூறி உள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி