ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

அனைவரையும் வாய்பிளக்க வைத்த சாப்பாட்டு ராமன்

அனைவரையும் வாய்பிளக்க வைத்த சாப்பாட்டு ராமன்

சீனாவில் 15 நிமிடத்திலேயே 40 தட்டு நூடில் சாப்பிட்டு நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

மத்திய சீனாவில் ஹுனான் மாகாணத்தின் லியூயங் என்ற பகுதியை சேர்ந்தவர்பான்யிஷ்காங் (வயது 45) இவர் வசிக்கும் அதே பகுதியில் உள்ள குங்பு பள்ளி ஒன்றில் ‘நூடில்ஸ்’ சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஆனால், போட்டி ஆரம்பித்து 15 நிமிடத்தில் பான்யிஷ்காங், 40 தட்டு நூடில்ஸ் சாப்பிட்டு முடித்ததுடன்’’கிig ஷிtoசீaணீh றிing’’ என்ற பட்டத்தையும் பெற்றார்.

மேலும் 25 தட்டு நூடில்ஸ் சாப்பிட ஆரம்பிக்கும்போது போட்டியில் எதிர்ப்பாளர் யாரும் இல்லாததால் போட்டியை நிறைவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

எனினும் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் 40 தட்டு நூடில்ஸை தான் சாப்பிட்டு முடிப்பதாக கூறியபடி சாப்பிட்டு வெற்றி வாகை சூடினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி