ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

சேர். ஜோன்டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டி; 20 புதிய சாதனைகளுடன் நிறைவு

றிட்ஸ்பரி அனுசரணையில்:

சேர். ஜோன்டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டி; 20 புதிய சாதனைகளுடன் நிறைவு

இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கம் ஏற்பாட்டில் றிட்ஸ்பரி அனுசரணையுடன் நடைபெற்ற 83 ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் அண்மையில் சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை வலல்ல ஏ ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயமும், ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும் வென்றெடுத்தன.விகிழி ஃபூட்ஸ் இன்டர்நெஷனல் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிலுபுல் டி சில்வா ஆதரவின் கீழ் பரிசளிப்பு விழா இடம்பெற்றது.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 137 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும், 107 புள்ளிகளுடன் வலல்ல ஏ ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் தனதாக்கிக் கொண்டன. மேலும் பெண்கள் பிரிவில் புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி 135 புள்ளிகளையும், வலல்ல ஏ ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம் 193 புள்ளிகளையும் பெற்றன. "தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதன் ஊடாக நாட்டின் இளம் மெய்வல்லுனர்களுக்கான ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி