ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

உள்ளூராட்சி வாரத்தையொட்டி கிரிக்கெட் போட்டி

உள்ளூராட்சி வாரத்தையொட்டி கிரிக்கெட் போட்டி

அக்கரைப்பற்று மாநகர சபை நடத்திய அணிக்கு 07 பேர் மட்டுப்படுத்தப்பட்ட 05 ஓவர்கள் பந்து வீச்சு கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை எவர்டொப் விளையாட்டுக்கழகம், வெற்றியீட்டி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

உள்ளூராட்சி வாரத்தையொட்டி மாநகர சபையினால் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று மாநகர சபை அணி, அக்கரைப்பற்று ஸ்ரெப் அணி, அக்கரைப்பற்று டோனா அணி, ஹார்ட் அன் சொப்ட் விளையாட்டுக் கழக அணி, அக்கரைப்பற்று தேசிய பாடசாலை அணி, அஸ் ஸிராஜ் வித்தியாலய அணி, முகம்மதியா புரம் றஹீமியா அணி, அட்டாளைச்சேனை எவர்டொப் அணி, திருக்கோவில் உதய சூரியன் அணி, ஜொலி போய்ஸ் அணி ஆகிய 10 அணிகள் பங்குபற்றின.

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ. அஹமட் ஸகி, பிரதி முதல்வர் எம்.எம்.எம். றிஸாம், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் எஸ்.எம். சபீஸ், என்.எம். நஜிமுடீன், கே.எல்.எம். சறூக், ஏ.எல். ஜுனைடீன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு போட்டி நிகழ்வுகளை ஆரம்பம் செய்து வைத்தனர்.

டோனா, ஹார்ட் அன் சொப்ட், றஹீமியா, எவர்டொப் அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோதின. எவர்டொப் ஹார்ட் அன் சொப்ட் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டி விறுவிறுப்பாக அமைந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஹார்ட் அன் சொப்ட் அணியினர் 5 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்களை பெற்றனர். (றிஸ்லாத் 05, பாஸித் 07, சியாம் 12, றிஜா 05, ருமான் 10)

பதிலுக்கு துடுப்பாடிய எவர்டொப் அணி 4.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றது. (அஸார் 07, சப்ராஸ் 12, சர்ஜுன் 06, சஹாப்டீன் 09, இத்ரீஸ் 12)

சிறந்த துடுப்பாட்ட வீரராக எவர்டொப் அணியின் றுமானும், சுற்றுப் போட்டியின் சிறந்த அணியாக அக்கரைப்பற்று ஸ்ரெப் அணியும் தெரிவு செய்யப்பட்டன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி