ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

புத்தளத்தில் உதைபந்தாட்டம்

புத்தளத்தில் உதைபந்தாட்டம்

புத்தளம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் நகர பிதா கிண்ணத்துக்கான உதை பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக் கான தகுதியை புத்தளம் நியூ பிரண்ட்ஸ் அணியும், லிவர்பூல் அணியும் பெற்றுள்ளன.

முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினரும், ஐ. ம. சு. கூட்டமைப்பின் வேட்பாளருமான ஏ. எச். எம். ரியாஸ் பூரண அனுசரணை வழங்கியுள்ள இத் தொடரில் ஒன்பது அணிகள் பங்கேற்றன.

கடந்த இரு நாட்களாக இடம் பெற்ற அரை இறுதிப் போட்டிகளில் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் விம்பிள்டன் அணியும், நியூ பிரண்ட்ஸ் அணியும் போட்டியிட்டதில் நியூ பிரண்ட்ஸ் அணி 2:1 கோல்களினால் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கான தகுதியைப் பெற்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி