ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு ரூ. 132 மில்லியன் ஒதுக்கீடு

கண்டி மாவட்டத்தில்

விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு ரூ. 132 மில்லியன் ஒதுக்கீடு

மஹிந்த சிந்தனையின் கீழ் கிராமங்களிலும் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேயின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய விளையாட்டுத்துறை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 07 பிரதேச செயலக பிரிவுகளுக்கு விளையாட்டுத்துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சினால் 132 மில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.

கிராமிய விளையாட்டுத்துறையினை மேம்படுத்துவதில் விளையாட்டுத்துறை சார்ந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் எத்கல விளையாட்டு மைதானம், மாயயியாவ வேவல்பிடிய விளையாட்டு மைதானம், யடபான விளையாட்டு மைதானம், லெச்சுமி தோட்ட விளையாட்டு மைதானம், குருதுவத்த ராஜகீய வித்தியாலய விளையாட்டு மைதானம், தெளவுன்ன விளையாட்டு மைதானம், கெஹெட் தோட்டம் அலுகொல்ல பிரிவின் விளையாட்டு மைதானம், கலமுதுனு தோட்டத்தின் வின்சன்ட் பொரஸ்ட் பிரிவின் விளையாட்டு மைதானம், வேஸ்டம்ஹால் பாடசாலை மைதானம், லேவலன் தோட்ட மேற்பிரிவின் விளையாட்டு மைதானம், லூல் கதுருவத்த கல்லுமலை விளையாட்டு மைதானம், இபுல்பிடியவத்த எல்.டி.ஏ. பிரிவின் எரோல்ட் பிரிவின் விளையாட்டு மைதானம், தங்கல்லை விளையாட்டு மைதானம் (கட்டம்1), புபுரஸ்ச 80 ஏக்கருக்குட்பட்ட விளையாட்டு மைதானம், லெகும்தெனிய விளையாட்டு மைதானம், ஆடியா கடவத்த விளையாட்டு மைதானம், ஒராயன்வத்த விளையாட்டு மைதானம், துன்தெனிய விளையாட்டு மைதானம், யனேகொட சுப்பர் லைன் விளையாட்டு மைதானம், சோகமாவத்த விளையாட்டு மைதானம், அங்கம்மன விளையாட்டு மைதானம், விக்ரமபாகு வித்தியாலய விளையாட்டு மைதானம் (கட்டம் 2), கம்பொல டி.எம். ஜயரத்ன விளை யாட்டரங்கு வத்தேகம பொது விளையாட்டு மைதானம் என்பவை இத்திட்டத்தின் கீழ் மீள்நிர்மாணிக்கப்பட் டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இக்கிராமிய திட்டங்களுக்கு மேலாக மத்திய மாகாணத்தில் நிர்மாணிக்கப்படும் திகன விளையாட்டரங்கு மற்றும் கம்பொல டி.மு. ஜயரத்ன விளையாட்டரங்கு என்பவற்றுக்கு 600 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் வருடத்தில் இவ்விளையாட் டரங்குகளின் நிர்மாணப்பணிகள் நிறைவு பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி