ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

எளியவராலும் பயன் உண்டு

எளியவராலும் பயன் உண்டு

குகைக்குள் சிங்கம் ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது. சுண்டெலி ஒன்று அதன் மீது ஏறி ஓடியது. கோபத்துடன் விழித்த சிங்கம் அந்தச் சுண்டெலியைப் பிடித்துக் கொண்டது.

‘காட்டு அரசே! என்னை மன்னித்து விட்டு விடுங்கள். இந்த உதவிக்குப் பதில் உதவி நானும் செய்வேன். சிறியவன் என்று என்னை நினைக்காதீர்கள்” என்று கெஞ்சியது. தனக்கு உதவி செய்வதாகச் சுண்டெலி பேசியதைக் கேட்ட சிங்கத்திற்குச் சிரிப்பு வந்தது. அதை விட்டு விட்டது. சிங்கத்திற்கு நன்றி கூறிவிட்டுச் சுண்டெலி அங்கிருந்து சென்றது.

சில நாட்கள் சென்றன. வேடர்கள் விரித்து வைத்திருந்த வலையில் சிங்கம் சிக்கிக் கொண்டது. தப்பிக்க வழி ஏதும் அறியாத அது காடே அதிரும்படி கர்ச்சனை செய்தது. சிங்கத்தின் கர்ச்சனையைக் கேட்ட சுண்டெலி அங்கே ஓடி வந்தது. வலையில் சிக்கிக் கொண்டிருந்த சிங்கத்தைப் பார்த்தது. “காட்டு அரசே! அஞ்ச வேண்டாம். என் கூரிய பற்களால் வலையை அறுத்து நான் உங்களை விடுதலை செய்கிறேன்” என்று சொல்லியபடி வலையை அறுத்து முடித்தது.

விடுதலை பெற்ற சிங்கம் அந்தச் சுண்டெலியை நன்றியுடன் பார்த்தது. “அரசே! அன்று எனது பேச்சைக் கேட்டு இந்தச் சுண்டெலியால் என்ன உதவி செய்ய முடியும் என்று நினைத்துச் சிரித்தீர்களே. சுண்டெலியாலும் உதவி செய்ய முடியும் என்பதை இப்பொழுது புரிந்து கொண்டீர்களா?” என்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி