ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

ஒபாமா மேற்குக்கரை விஜயம்

ஒபாமா மேற்குக்கரை விஜயம்

இஸ்ரேல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று மேற்குக்கரையின் ரமல்லா நகரை சென்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஹெலிகொப்டர் மூலம் ரமல்லாவை வந்தடைந்த ஒபாமாவை மஹ்மூத் அப்பாஸ் இராணுவ மரியாதையுடன் வரவேற்றார். பின்னர் அவரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்று இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினார். இதில் இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஒருசில மணி நேரங்களை ரமல்லாவில் கழித்த ஒபாமாவின் வருகையால் பெரிய மாற்றங்கள் ஏற்படமாட்டாது என அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை இஸ்ரேலை வந்தடைந்த ஒபாமா இஸ்ரேலுக்கு தமது வலுவான ஆதரவை வெளியிட்டார். புதன்கிழமை இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்னாகு மற்றும் பராக் ஒபாமாக்கு இடையிலான சந்திப்பில் இஸ்ரேல்- பலஸ்தீன பிரச்சினைக்கு இரு தேச தீர்வுத் திட்டத்தை உறுதி செய்தனர். இதன்போது உரையாற்றிய ஒபாமா, மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படத்து வதே எமது இறுதி இலக்காகும். யூத தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் பலஸ்தீன இறையாண்மை மற்றும் சுதந்திர தேசத்தை ஏற்பதே எமது இலக்காகும் என்றார்.

ஒபாமாவின் ரமல்லா விஜயத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரியும் பங்கேற்றிருந்தார். இதன் போது பலஸ்தீன ஜனாதிபதி மற்றும் பிரதமர் சலம் பையத் உட்பட அதிகாரிகளை சந்தித்தார். எனினும் ஒபாமாவின் வருகையையொட்டி ரமல்லாவில் ஜனாதிபதி வளாகத்திற்கு வெளியில் 150க்கும் அதிகமானோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டதை நடத்தினார்.

அதேபோன்று ஜெரூசலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பலஸ்தீன எதிர்ப்பாளர்களின் முகாமிலும் ஒபாமாவுக்கு எதிரான வாசகங்கள் பொறித்த பதாகை தொங்கவிடப்பட்டிருந்தது. அதில், “ஒபாமா நீங்கள் மாற்றத்தை கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் எமக்கு காலனித்துவத்தையும் இனப்பிரி வினையையும்தான் தந்திருக்கிaர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி