ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70

இலங்கைக்கு எதிரான பிரேரணை nஜனீவாவில் நேற்று நிறைவேற்றம்

ஆதரவு: 25 இலங்கை சார்பு: 13 இலங்கைக்கு ஆதரவாக 8 நாடுகள் நடுநிலை

இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானும் எதிராக இந்தியாவும் வாக்களிப்பு

ஜெனீவா, ஐ. நா. மனித உரி மைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 25 நாடுகளும் இலங்கைக்குச் சார்பாக 13 நாடுகளும் வாக்களித்தன. எட்டு நாடுகள் நடுநிலைமை வகித்தன. பாகிஸ்தான், தாய்லாந்து, வெனிசுவேலா, ஈக்வடோர் உட்பட 8 நாடுகள் இலங்கைக்குச் சார்பாக வாக்களித்தன. இந்தியா இந்தத் தடவையும் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. இலங்கை நேரப்படி பிற்பகல் 3.35 மணி அளவில் ஜெனீவாவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

விவரம்

ஹோட்டல் கைத்தொழில் சம்பந்தப்பட்ட உபகரணங்களை உற்பத்தி செய்வதற்காக உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்குத்
தேவையான வசதிகளை வழங்குவேன். உல்லாசப் பயணிகளுக்கு மலிவு விலையில் பெற்றுக் கொள்ளக் கூடிய சகல வசதிகளுடனான சிறிய இல்லங்களை ஆரம்பிப்பதற்காக சுற்றுலாப் பிரதேசங்களில் வாழ்கின்றவர்களுக்கு வாய்ப்பும் ஊக்கமும் அளிப்பேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பொய்ப் பிரசாரங்களால் அரசாங்கத்தின் பயணத்தை தடுக்க முடியாது

வதந்திகளாலும் பொய் பிரசாரங்களா லும் அரசாங்கத்தின் பயணத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார். ஸ்ரீ-லங்கா சுதந்திரக் கட்சியை வலுப் படுத்தி எதிர்கால சந்ததியினருக்காக சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பவென அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப் பிட்டார். ஸ்ரீ-லங்கா சுதந்திரக் கட்சியின் 'மக்கள் சக்தியைப் பலப்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் 'நாட்டை உயர்த்தும் நீல அலை' என்ற தலைப்பின் கீழ் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விவரம்

கல்லடிப் பாலம்

பல மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மட்டு. கல்லடிப் பாலத்தினையே படத்தில் காண்கிaர்கள். இப்புதிய பாலம் மக்கள் பாவனைக்காக ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. (படம்: விமல் கருணாதிலக்க)

கிழக்கு மாகாணம் எங்கும் அபிவிருத்தி: விழாக் கோலம்; கடமையில் 6000 பொலிஸார்

தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நாளை அம்பாறையில் ஆரம்பம்

தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சி நாளை (23) ஆரம்பமாக உள்ளதோடு விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. தேசத்துக்கு மகுடம் மாபெரும் கண்காட்சியை ஒட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 6 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியது.

விவரம் »


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் சக்தியைப் பலப்படுத்தும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலை மையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. “நாட்டைக் கட்டியெழுப்பும் நீல அலை” எனும் மகுடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் கட்சி ஆதரவாளர்களுடன் அளவளாவுவதைப் படத்தில் காணலாம். (படம்: சுதத் சில்வா)