ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

போலியான தகவல்களை வழங்கி பெறப்பட்;ட 3.84 இலட்சம் 'ஆதார்' அட்டைகள் இரத்து

போலியான தகவல்களை வழங்கி பெறப்பட்;ட 3.84 இலட்சம் 'ஆதார்' அட்டைகள் இரத்து

இந்தியர்கள் அனைவருக்கும் வரிசை எண் வாரியான அடையாளம் வழங்கும் நோக்கில் நாடு தழுவிய அளவில் ஆதார் அட்டைகளை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்படி 2014 மார்ச் மாதத்திற்குள் 60 கோடி மக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

உணவுப் பொருள், எரிபொருள், உரம் போன்றவற்றிற்கு வழங்கப்படும் மானியத் தொகை மற்றும் அரசின் இதர சலுகைகளை இனி ஆதார் அட்டைகளின் மூலமாகதான் பெற முடியும் எனவும் அரசு அறிவித்துள்ளது. அதனால், போலியான தகவல்களை தந்து ஒன்றுக்கு மேற்பட்ட அட்டைகளை பெற மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக அதிகாரிகளுக்கு வரும் புகார்கள் அதிகரிக்கவே, இதுவரை அட்டைகள் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அட்டையை பெற்ற நபர்கள் சரியான முகவரியில் வசிக்கிறார்களா? என அதிகாரிகள் சீராய்வு செய்தனர்.

இவ்வகையில், போலியான தகவல்களை அளித்து பெறப்பட்ட 3 இலட்சத்து 84 ஆயிரத்து 237 ஆதார் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் ராஜீவ் சுக்லா மக்களவையில் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி