ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70

அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான கபட நாடகம் இந்தியாவின் உதவியுடன் ஜெனீவாவில் மேடையேறியது

அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான கபட நாடகம் இந்தியாவின் உதவியுடன் ஜெனீவாவில் மேடையேறியது

ஜெனீவாவில் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிரான கபட நாடகம் இவ்வாண்டிலும் நிறைவேறியது. அமெரிக்காவின் இந்தத் தீர் மானத்தை ஆதரித்து 25 நாடுகளும் அதனை எதிர்த்து இலங் கைக்கு ஆதரவாக 13 நாடுகளும் அது போன்று இலங்கைக்கு மறைமுக ஆதரவை தெரிவிக்கும் முகமாக 8 நாடுகள் வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்தமை இலங்கைக்கு கிடைத்த ஒரு வெற்றி என்றே நாம் கருதுகிறோம்.

இலங்கையின் கழுத்தை நெரித்து எங்களை பாதாள கிடங்கிற்குள் தள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் அமெரிக்கா செயற்பட்ட போதிலும் இலங்கைக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஞாபகப்படுத்துவதாக இந்த வாக்கெடுப்பு அமைந்திருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

இலங்கையை ஆதரித்து அயல் நாடுகளான பாகிஸ்தானும், தாய்லாந்தும் வாக்களித்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். அது போன்று வெனிசுவெலா, ஈக்வடோர் போன்ற நாடுகளும் எங்க ளை ஆதரித்து வாக்களித்தன. எந்நேரத்திலும் எங்களுக்கு உதவி செய்து வரும் ஜப்பான் பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் இருந்த பொழு திலும் இலங்கைக்கு ஆதரவாக வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்தது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விடயமாகும்.

இந்தியா நாம் எதிர்பார்த்ததைப் போன்று இலங்கைக்கு எதிராக தனது வாக்கை அளித்தது. தமிழ்நாட்டின் பிரதான அரசியல்கட்சிகளான கரு ணாநிதியின் திராவிட முன்னேற்றக்கழகமும், ஜெயலலிதாவின் கட்சி யும் தெரிவித்த எதிர்ப்புக்கு முகம் கொடுக்க முடியாமலேயே இந்தியா இவ்விதம் இலங்கையை எதிர்த்து வாக்களித்தது. இந்தியா போன்ற நாடுகள் தேர்தல் வெற்றியை மனதில் வைத்து இவ்விதம் மனச்சாட்சி க்கு விரோதமாக வாக்களித்தது எமக்கு வேதனையை அளிக்கிறது.

அடுத்தாண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே பல இடைத்தேர்தல்களிலும் மாநில தேர்தல்களிலும் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அடுத்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு நியமிப்பதென்று தீர்மானி த்திருக்கும் ராகுல்காந்திக்கு அரசியல் அனுபவம் இல்லையென்றும் அவர் ஏற்கனவே பல தேர்தல்களை முன் நின்று நடத்திய போதும் அத்தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திரு ப்பதனால் இந்திய மக்கள் ராகுல்காந்தி மீது இப்போது நம்பிக்கை இழந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேர ணையில் இந்தியா திருத்தமொன்றை கொண்டு வந்துள்ளது. சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நேர்மையான சுதந்திர விசாரணையை நடத்த வேண்டுமென்பதே அந்தத் திருத்தமாகும். இலங்கையில் நல்லி ணக்கத்தை ஏற்படுத்தும் அதே வேளையில் அதன் செயற்பாடுகள் ஒளிவுமறைவற்ற முறையில் இருக்க வேண்டுமென்பதை வலியு றுத்துவதாக இந்த அமெரிக்கப் பிரேரணை அமைந்துள்ளது.

2009ம் ஆண்டில் முடிவடைந்த எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத யுத்தத்தை அடு த்து நடந்த நிகழ்வுகள் தொடர்பாகவே இந்த அமெரிக்கப் பிரேரணை தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரேரணையை அமெரிக்கா முன்மொழிந்தாலும் அந்நாடு ஏனைய அனுசரணைய ளிக்கும் நாடுகளின் இணக்கத்துடன் இப்பிரேரணைக்கான திருத்தங் களை ஏற்றுக் கொள்ளும் கடப்பாட்டினை கொண்டுள்ளது.

2012ம் ஆண்டில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேர ணைக்கு அங்கு அங்கத்துவம் வகித்த 47 நாடுகளில் 24 நாடுகள் ஆத ரித்து வாக்களித்தன. 15 நாடுகள் இலங்கையை ஆதரித்து வாக்களித்தன. அதேவேளையில் 8 நாடுகள் வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்தன.

இந்தியா இந்த அமெரிக்க பிரேரணை தொடர்பாக ஒரு முக்கிய திருத் தத்தை முன்மொழிந்துள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் கலந்தா லோசித்து அதன் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டு மென்ற திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திருத்தத்திற்கு அமைய சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கை விவகாரங்களில் ஈடுபடுவ தையோ நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கு உதவுவதையோ இந்தத் திருத்தம் தடை செய்கிறது. கடந்தாண்டின் பிரேரணையில் இந்த பதம் சேர்க்கப்பட்டிருந்தது.

ஜெனீவா ஐக்கிய நாடுகள் தலைமையகத்துக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, இலங்கை கடந்தாண்டில் தங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்தார். இது அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிக்க ப்பட்ட பிரேரணை என்பதனால் நாம் இதனை அங்கீகரிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதே வேளையில் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்றக்கழகம் குற்றம் சாட்டுவது போல இலங்கை ஜனாதிபதி ஒரு யுத்தக்குற்றவாளி அல்ல என்று அக்கட்சியின் பேச்சாளரான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இலங்கையில் இனப்பிரச்சினை தோன்றுவதற்கு தூபமிட்டு பயங்கரவாதி களுக்கென இந்தியாவில் தனியான முகாம்களை அமைத்து அன்றைய பிரதம மந்திரி இந்திராகாந்தி இலங்கைக்கு செய்த மன்னிக்க முடியாத குற்றத்தினால் தான் எல்.ரி.ரி.ஈ. போன்ற இயக்கங்கள் தோன்றியதுடன் இலங்கை சர்வதேச அரங்கில் இத்தகைய மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுகள் போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க வேண்டியிருப்பதை இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஞாபகப்ப டுத்துவது பொருத்தமாக இருக்கும்.

ஜெனீவாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிராக அமெரி க்கா கொண்டு வந்த பிரேரணை எமது நாட்டுக்கு சிறிதளவு மன அழுத் தத்தை ஏற்படுத்தினாலும் இதன் பக்கவிளைவு இந்தியாவின் இந்திரா காந்திப் பரம்பரையின் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பிரச்சினைகளை உருவாக்கி யிருக்கிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி