ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

2012: க. பொ. த. (சா/த) செயன்முறை பரீட்சைகள் மார்ச் 4 முதல் 14 வரை

2012: க. பொ. த. (சா/த) செயன்முறை பரீட்சைகள் மார்ச் 4 முதல் 14 வரை

* 1111 பரீட்சை நிலையங்கள்

* ஒரு இலட்சத்து 15,000 மாணவர்கள் தோற்றுவர்

நடந்து முடிந்த 2012 ஆம் ஆண்டுக் கான க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்குரிய செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் ஆரம்பமாவதாக பரீட் சைகள் ஆணையாளர் புஷ்பகுமார தெரிவித்தார்.

மார்ச் 04 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள செயன்முறைப் பரீட்சைக்கு நாடு முழுவதுமுள்ள ஒரு இலட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

நடனம், சங்கீதம் உள்ளிட்ட செயன்முறைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தமக்கு வழங்கப்பட்டிருக் கும் பரீட்சை நிலையத்திற்கு நேரத்திற்கு சமுகமளிக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த செயன்முறைப் பரீட்சைகளுக்கென நாடு முழுவதும் 1111 பரீட்சை நிலையங்கள் ஆயத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்க ப்பட்ட மாணவர்களுக்கு அண்மையில் நடத்தப்பட்ட விசேட பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றமையால் 2012 இற்கான க. பொ. த. சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினத்தை தற்போதைக்கு கூற முடியாதிருப் பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி