ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

பாராளுமன்ற எம்.பிக்கள் உணவகத்தில் பன்றி இறைச்சி பரிமாறப்படுவதற்கு எதிர்ப்பு

பாராளுமன்ற எம்.பிக்கள் உணவகத்தில் பன்றி இறைச்சி பரிமாறப்படுவதற்கு எதிர்ப்பு

ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது

பாராளுமன்ற உறுப்பி னர்களுக்கான உணவகத் தில் பன்றி இறைச்சி பரி மாறப்படுவதை முஸ்லிம் எம்.பிக்கள் மட்டுமன்றி அதிகமான சிங்கள எம்.பி. களும் எதிர்ப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதி பதியின் கவனத்திற்கு கொண்டு வந் துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பி னர் ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.

இதேவேளை, பாராளு மன்றத்தில் பன்றி இறை ச்சி பரிமாறப்பட்டால் பாராளுமன்ற உணவகத் தில் சாப்பிடுவதை பகிஷ்கரிக்கப் போவதாக முஸ்லிம் எம்.பிக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வினவியதற்குப் பதிலளித்த அஸ்வர் எம்.பி. சபாநாயகரின் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற விவகார கூட்டத்தில் பன்றி இசைச் விவகாரம் ஆராயப்பட்டுள்ளது. முஸ்லிம் எம்.பிக்கள் ஆட்சேபிப்பதால் பன்றி இறைச்சியும் தமிழ் எம்.பிக்கள் எதிர்ப்பதால் மாட்டிறைச்சியும் நீண்டகாலமாக பாராளுமன்றத்தில் சமைக்கப்படுவதில்லை என்றார்.

ஆனால் தங்களுக்கு பன்றி இறைச்சி வேண்டும் என ஐ. தே. க. எம்.பிகள் இருவர் கோரினர். இதற்கு நானும் பிரதி அமைச்சர் கீதாஞ்சனவும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தோம். எந்தவித இறைச்சியும் இன்றி மரக்கறி பரிமாறுமாறு நாம் வேண்டினோம். இந்த நிலையில் பன்றி இறைச்சி வேண்டுமானால் இரு தினங்களுக்கு முன்னர் அது குறித்து அறிவிக்க வேண்டும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஆனால் எமக்கு இதற்கும் இணங்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எமது ஆட்சேபனையை தெரிவித்துள்ளோம் என்றார்.

இதேவேளை, பாராளுமன்ற உணவகத்தில் சாப்பிடுவதை பகிஷ்கரிக்கப் போவதாக மு. கா. செயலாளர் ஹசனலி எம்.பி. தெரிவித்துள்ளார். ஏனைய எம்.பிக்களும் பகிஷ்கரிப்பர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை முஸ்லிம் எம்.பிக்களுக்கென தனியான உணவகம் ஒன்றை உருவாக்குமாறு சபாநாயகரை கோரவும் சில எம்.பிக்கள் தீர்மானித்துள்ளனர். இதேவேளை பாரூக் எம்.பியும் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். பன்றி இறைச்சி பரிமாறப்படுவது முஸ்லிம் எம்.பிக்களுக்கு பாதிப்பு எனவும் அதற்கு இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி