ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

ஒலியைவிட ஏழு மடங்கு வேகத்தில் புதிய ஏவுகணை

பிரமோஸ் III

ஒலியைவிட ஏழு மடங்கு வேகத்தில் புதிய ஏவுகணை

எதிரி இலக்கை துல்லியமாக தாக்கிவிட்டு திரும்பிவரும் என்கிறது இந்தியா

ரஷ்ய நாட்டின் கூட்டு தொழில்நுட் பத்துடன் ஒலியைவிட 7 மடங்கு அதிக வேகத்தில் பாயக்கூடிய ‘பிரமோஸ்’ ஏவுகணையை இந்தியா விரைவில் தயாரிக்க உள்ளது என பிரமோஸ் விண் வெளி ஆய்வு மைய மேலாண்மை இயக்குநர் சிவதாணுப் பிள்ளை தெரிவித்தார்.

சமீபத்தில் பத்மபூஷன் விருது பெற்ற சிவதாணுப் பிள்ளைக்கு திருச்சியில் பாராட்டு விழா நடைபெற்றது. அவ்விழா வில் பேசிய அவர் கூறியதாவது,

தற்போது ஒலியை விட 3.5 மடங்கு அதிக வேகத்தில் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கவல்ல பிரமோஸ் வகை ஏவுகணை நம்மிடம் உள்ளது.

இந்திய- ரஷ்ய கூட்டு முயற்சியில் இதனைவிட அதிக வேகத்தில், ஒலியை விட 7 மடங்கு வேகத்தில் பாயவல்ல மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் யியி ஏவுகணையை தயாரிக்க திட்டமிட் டுள்ளோம்.

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் ஆய்வு மையத்தை சேர்ந்த 20 விஞ் ஞானிகளின் உதவியுடன் அதிக வெப்பத்தை தாக்குப் பிடிக்கக் கூடிய ஏவுகணையின் உடல் பகுதி வடிவமைக்கப்படும்.

ஏவுகணையை தூண்டும் சக்தி, இயந்திரப் பிரிவு ஆகியவை ரஷ்யாவின் தொழில்நுட்பத்துடன் நவீனமயமாக்கப்படும். இன்னும் 5 ஆண்டுகளுக்குள் தயாரிக் கப்படும் இந்த ஏவுகணைகள் எதிரியின் இலக்கை அழித்துவிட்டு மீண்டும் ஏவப்பட்ட இடத்திற்கே திரும்பி வரும் வகையில் உருவாக்கப்படும்.

இராணுவம், கடற்படை ஆகியவை எங்களிடம் இருந்து பிரேமோஸ் ஏவுகணைகளை ஏற்கனவே வாங்கி வரும் நிலையில் இந்திய விமானப் படையும் தற்போது ஆர்டர்களை தந்துள்ளது.

புதிய பிரமோஸ் ஏவுகணைகளை தயாரிக்க தனியாக உற்பத்திக் கூடம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஐதராபாத், திருவனந்தபுரத்தில் உள்ள பழைய உற்பத்தி கூடங்களை நவீனப்படுத்தவும் விரிவுபடுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி