ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

இலங்கை எந்தச் சந்தர்ப்பத்திலும் பீதியடையவே தேவையில்லை

ஐ. நா. மனித உரிமைகள் பேரவை:

இலங்கை எந்தச் சந்தர்ப்பத்திலும் பீதியடையவே தேவையில்லை

இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியசுவாமி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பிரேரணை தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை பீதியடையத் தேவையில்லை என இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் கலாநிதி சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தை தோற்கடித்து இலட்சக் கணக்கான பொதுமக்களை மீட்டெடுத்த அர சாங்கத்திற்கு ஆதரவு வழங்க பெரும் பாலான நாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சர்வதேச ரீதியில் இந்தியா எடுக்கின்ற அநேக மான தீர்மானங்களின் பின்னணியில் இருப்பது அரசியல் நோக்கங்கள் என்று கூறிய அவர், அவ் வாறான நோக்கங்களில் தெளிவைக் காணக் கூடியதாக இருப்பது இல்லை என்றும் கூறினார்.

ஊடகங்களை தெளிவுபடுத்தி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இஸ்ரவேலை எடுத்துக்கொண்டால், இந்தியா அநேகமான சந்தர்ப்பங்களில் முட்டாள்தனமான முடிவுகளுக்கு வந்துள்ளது.

இலங்கை தொடர்பில் இந்தியா விலுள்ள பெரும்பான்மையானோர் அமெரிக்காவின் பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்காது என்றும் அவர் தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்க குடியரசு அரசியல் நோக்கங்க ளுக்காக செயற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்காவுக்கு மனித உரிமைகள் தொடர்பில் அவ்வளவு நல்லபிப்பிராயம் இல்லை எனவும் கூறினார்.

இந்திய தமிழ் முன்னேற்ற கழக கட்சிக்கு தமிழ் மக்களுக்கு காட்டுவதற்கு எதுவும் இல்லை. அதனால்தான் இதனை பெரிதாக்க முயற்சிக்கின்றது.

இவற்றை அடிப்படையாக வைத்து பார்த்தால், இவ்வாறான பிரேரணைகள் தொடர்பில் எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை. அவ்வாறு முக்கியமானது எதுவும் இல்லை எனவும் இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி