ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49

இன, மத நல்லுறவை ஏற்படுத்தும் பொறுப்பு சகல மக்களுக்கும் இருக்கிறது

நாட்டில் சகல வேற்றுமைகளையும் தூக்கியெறியும் காலம் உருவாகியிருக்கிறது

கீனகஹவில வைபவத்தில் ஜனாதிபதி

நாட்டிலுள்ள சகல சமூகங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நெருக்கமான நட்புறவை ஏற்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எஹலிய கொட தொகுதியில் கீனகஹவில என்னும் இடத்திலுள்ள ஸ்ரீ ஆனந்த ராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாது கோபுரத்தை திறந்து வைத்து பேசுகையில் கூறினார்.

விவரம் »

வெளிநாடுகள் சென்று வாழும் மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்காகவும், இந்நாட்டிற்குத் திரும்பி வந்து வாழவும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதற்காகவும் புலம்பெயர்ந்து வாழ்வோர் தொடர்பாகப் பணியாற்றும் செயலகமொன்றை நிறுவுவேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ஐ. நா. மனித உரிமைகள் பேரவை:

இலங்கை எந்தச் சந்தர்ப்பத்திலும் பீதியடையவே தேவையில்லை

இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியசுவாமி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பிரேரணை தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை பீதியடையத் தேவையில்லை என இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் கலாநிதி சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். பயங்கரவாதத்தை தோற்கடித்து இலட்சக் கணக்கான பொதுமக்களை மீட்டெடுத்த அர சாங்கத்திற்கு ஆதரவு வழங்க பெரும் பாலான நாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

விவரம் »

லொறி குடை சாய்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு; ஒன்பது பேர் காயம்

பண்டாரகம-பிலியந்தலை வீதியில் அதிகாலையில் சம்பவம்

பண்டாரகம- பிலியந்தலை வீதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இவ ர்கள் பயணித்த லொறி குடை சாய்ந்ததில் இவர்கள் இருவரும் இறந்துள்ளதோடு 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். லொறி சாரதிக்குச் சொந்தமான வயலில் இருந்து நெல் அறுவடை செய்து எடுத்து வருகையிலே விபத்து சம்பவித்துள்ளது.

விவரம் »

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 2ம், 3ம் கட்டம் வருட இறுதிக்குள் பூர்த்தி

மின்சார உற்பத்தியில் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய அரசாங்கத்தின் வருமானத்தில் பெரும் தொகையினைச் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள் ளது. மின்சார உற்பத்தியில் அலகு ஒன்றினை உற்பத்தி செய்வதற்கு சுமார் 23 ரூபா 50 சதம் செலவாகின்ற போதிலும் சுமார் பத்து இலட்சம் பாவனையாளர் களிடமிருந்து ஒரு அலகுக்கு 3 ரூபாவையே அறவிடுகின் றோமென மின்சக்தி எரி பொருள் துறை அமைச்சர் திருமதி பவித்ரா வன்னி யாராச்சி தெரிவித்தார்.

விவரம் »


மாத்தளை முத்துமாரியம்மன்
ஆலய பஞ்சரத பவனி