ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

இனிகலை - உகுரஸ்ஸபிட்டிய பாதை சீரமைப்புச் செய்ய நடவடிக்கை

இனிகலை - உகுரஸ்ஸபிட்டிய பாதை சீரமைப்புச் செய்ய நடவடிக்கை

மத்திய மாகாண அவசர அனர்த்த புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இனிகலை - உகுரஸ்ஸபிட்டிய பாதையைச் சீரமைப்புச் செய்ய ஒழுங்குகள் எடுக்கப்பட்டுள்ளதாக செயற்றிட்ட அதிகாரி தகவலளித்துள்ளார்.

மத்திய மாகாண தெரு அபிவிருத்தி மின்சக்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு இப்பாதைச் சீரமைப்பை வழிநடத்தும் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரமான இப்பாதையின் முதற்கட்டம் இனிகலை கொண்டதெனி வரை கற்தாரிட்டு செப்பனிடப்படும். இத்திட்டம் ஆறு மாதகாலத்திற்குள் பூரணப்படுத்தப்படும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி