ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

பேருவளை பாஸிய்யா கல்வி நிலையத்தில் வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

பேருவளை பாஸிய்யா கல்வி நிலையத்தில் வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

சீனன்கோட்டை பாஸிய்யா கல்வி நிலையம் பேருவளைப் பகுதியில் வறிய மாணவர்களது கல்வி மேம்பாட்டுக்கு ஆற்றும் பணிகளை பேருவளை பொல்கொடுவ சாந்த ஆனா தேவாலய பிரதம குரு பிதா ரோசன் சமிந்த அவர்கள் பாராட்டினார்.

சீனன்கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅத்தின் கல்வித்துறை அமைப்பான பாஸிய்யா கல்வி நிலையம் பொல்கொடுவ ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 50 குறைந்த வருமானம் பெறும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பேருவளையில் இன உறவைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இந்த அமைப்பு இரு முஸ்லிம் பாடசாலைகளுக்கும், இரு சிங்களப் பாடசாலைகளுக்கும் கற்றல் உபகரணங்களை வழங்கியது.

இதன் போது 400 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் கையளிக்கப்பட்டது. அதிபர் ஜனக சில்வா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாஸிய்யா கல்வி நிலையத் தலைவர் டொக்டர் நூருல் இஸ்லாம் பேருவளை பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரி ரணவீர மற்றும் பொலிஸ் சார்ஜண்ட் கித்சிறி உட்பட பாஸிய்யா கல்வி நிலைய உறுப்பினர்கள் பலரும் பங்கு பற்றினர்.

அதிபர் ஜனக சில்வா பேசும் போது; வறிய மாணவர்கள் கல்வி பயிலும் இப் பாடசாலைக்கு பாஸிய்யா கல்வி நிலையம் வழங்கும் உதவிகளுக்காக நன்றி கூறுகிறேன். இந்த அமைப்பின் நல்ல பணிகள் தொடர வேண்டும் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி