ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231

ஜே.வி.பி விவகாரங்களில் அரசு தலையிடாது

மீண்டும் ஆயுத கலாசாரத்தை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்

ஜே.வி.பியின் உட்கட்சி விவகாரங்களில் அரசு ஒருபோதும் தலையிடாது. அவர்களே அதனை தீர்த்துக் கொள்ள வேண் டும். எனினும் துப்பாக்கி கலாசாரமொன்று இலங்கையில் மீண்டும் தலை தூக்குவதற்கு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.ஜே.வி.பியினரின் பிளவு மற்றும் உட்பூசல்கள் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்துள்ள புபுது ஜயகொட பத்திரிகையொன்றுக்கு எழுதியிருந்த கட்டுரையொன்றில் "இந்த நாட்டில் ஆயுத துப்பாக்கி கலாசாரத்துக்கு இடமில்லை என்று கூறியிருந்தார்.

விவரம் »

கொரியா, ஜப்பான், லிபியா ஆகிய நாடுகளில் 50,000 இலங்கையர்களிற்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதோடு இந்த தொழில்களின் பொருட்டு இளைஞர்களைத் தெரிவு செய்தல் முழுமையாகவே ஒளிவுமறைவற்ற விதத்தில் நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

சேரி, தோட்ட வாழ்வுக்கு முற்றுப்புள்ளி

கொழும்பில் தோட்டம், சேரி என்ற வாழ்க்கை முறையிலிருந்து மக்களை வேறுபடுத்தி அவர்களது வாழ்வை மேம்படுத்தும் நோக்குடனேயே அரசு பாரிய வீடமைப்பு திட்டங்களை அமுல்படுத்துகிறது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கென 1930 தொகுதி வீடுகள் கட்டப்படவுள்ளன. அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

விவரம் »

15 வாகனங்களை மோதி
சரக்கு லொறி விபத்து

கல்முனை, அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் மாளிகைக்காடு பிரதேசத்தில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 12 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள்,
கார் மற்றும் பிக்கப் வாக னம் என்பன சேதத்திற்குள்ளாகியுள்ளன.


                                        
விவரம்»

புலிகளின் பொறுப்பற்ற செயலால் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்தோம்

விசாகன்

"புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஷெல் தாக்குதலில் காயமடைந்து ஊனமடைந்திருந்தாலும் உறுதியுடன் இருக்கிறேன். புலிகளின் பொறுப்பற்ற கண்மூடித்தனமான நடவடிக்கைகளினால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குணசிங்கம் விசாகன் (28 வயது).

விவரம் »

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் மிலிந்த மொறகொட வர்த்தக சமூகத்தை சந்தித்துப் பேசினார். கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான எம்.எச். முஹமட், ஆர்.ஏ.டி. சிறிசேன உட்பட முக் கியஸ்தர்கள்
 கலந்து கொண்டனர்.