ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 
சேரி, தோட்ட வாழ்வுக்கு முற்றுப்புள்ளி

சேரி, தோட்ட வாழ்வுக்கு முற்றுப்புள்ளி

கொழும்பில் தோட்டம், சேரி என்ற வாழ்க்கை முறையிலிருந்து மக்களை வேறுபடுத்தி அவர்களது வாழ்வை மேம்படுத்தும் நோக்குடனேயே அரசு பாரிய வீடமைப்பு திட்டங்களை அமுல்படுத்துகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கமைய குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கென 1930 தொகுதி வீடுகள் கட்டப்படவுள்ளன. அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவையின் இந்த முடிவின் பிரகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக கொழும்பில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் 384 தொகுதி வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்கென 960 மில்லியன் ரூபாவை இன்டர் நேஷனல் கன்ஸ்ரக்ஷன் அன்ட் கொன்சோடியம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2500 மில்லியன் ரூபா செலவில் மேலும் 1000 வீடுகளும், 1370 மில்லியன் ரூபா செலவில் 550 யுனிட் வீடுகளும் கட்டப்படவுள்ளன. இதற்கான அனுமதியையும் அமைச்சரவை வழங்கியுள்ளது.

இதேவேளை கொழும்பில் வருமானம் குறைந்தவர்களுக்கென 14,398 தொகுதி வீடுகளை கட்டுவதற்கும் ஐந்து இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு கட்டப்படும் ஒருதொகுதி வீடமைப்புக்கென 25 இலட்சம் ரூபாவை அரசு செலவு செய்கிறது என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

சேரிப்புற வீடுகளில் குடியிருப்பவர்க ளையும் இப்பகுதியையும் கொரியா என்றே அழைத்தார்கள்.

இன்று கொரியா நன்கு முன்னேறி விட்டது.

ஆனால் கொழும்பில் தோட்டப் புறங்களிலும் சேரிகளிலும் வாழும் மக்கள், அவர்களது குழந்தைகளின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும் ஒரு திட்டத்தையே அரசு முன்னெடுக்கிறது.

தேர்தல் காலத்தில் இதனை எதிர்க் கட்சிகள் சாதகமாக பயன்படுத்தி மக்களுக்கு பிழையான தகவல்களை கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

மொரட்டுவ, வனாத்தவில்லு பகுதிக ளிலும் இதேபோன்றுதான் தொடர்மாடி வீடுகள் அமைக்கும் போது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இன்று அந்த மக்கள் சேரி வாழ்க்கையை விட்டு நல்ல வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.

தற்காலிக மகிழ்ச்சியைவிட நிரந்தரமான மகிழ்ச்சிக்கான திட்டமே இது என அமைச்சர் கெஹலிய கூறினார். (ள)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி