ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 

பெண் மீதான கசையடி தீர்ப்பை ரத்துச் செய்தார் சவூதி மன்னர்

பெண் மீதான கசையடி தீர்ப்பை ரத்துச் செய்தார் சவூதி மன்னர்

தடையை மீறி கார் ஓட்டிய பெண் மீது சவூதி நீதி மன்றம் விதித்த 10 கசையடி தண்டனையை மன்னர் அப்துல்லா ரத்து செய்துள்ளார்.இந்த தகவலை அந்நாட்டு இளவரசி அமிரா அல் தவீல் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“இறைவனுக்கு நன்றி, ஸைமா மீதான கசையடி தண்டனை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி பெண்கள் அனைவருக்கும் இந்த தகவல் மகிழ்ச்சி அளிக்கும்” என்று குறிப்பிட்டார். இளவரசி அமிரா அல் தவீல், சவூதியின் கோடீஸ்வர இளவரசர் அல் வலீத் பின் தலாவின் மனைவியார்.

தடையை மீறி காரோட்டிய ஷைமா ஜஸ்தானியா என்ற பெண்ணுக்கு ஜித்தா நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை 10 கசையடி வழங்குமாறு தீர்ப்பளித்தது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி