ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

தலிபான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை உண்மை

தலிபான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை உண்மை

அமெ. பாதுகாப்பு செயலர் தகவல்

தலிபான் அமைப்புடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மை என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபட் கேட்ஸ் உறுதி செய்தார்.

ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வர, தலிபான் அமைப்புடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக, சமீபத்தில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீது கர்சாய் கூறி இருந்தார். இதை, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபர்ட் கேட்ஸ் உறுதிபடுத்தி இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “தலிபான் இயக்கத் தலைவர் முல்லா உமருடன், சில நாடுகளின் உதவியுடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான்.

இந்த பேச்சு நடந்து வந்தாலும், தலிபான் களுடன் நடக்கும் போரின் கடுமை குறையாது” என்று அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “பாகிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டாலும், அல்கொய்தா மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் பாகிஸ்தான் அரசும் இணைந்து செயல்படும்” என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி