ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145

இரத்ததானம் மூலம் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் பணியை செய்வோம்

இரத்ததானம் மூலம் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும்
பணியை செய்வோம்

அன்னதானம் செய்வதை விட ஒரு மனிதனுக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கும் ரத்த தானம் உன்னதமான ஒரு நன்னெறி யாகும். இன்றைய நவீன உலகில் மனிதர்கள் தங்கள் வச முள்ள பணப் பலத்தினாலும், அதிகாரப் பலத்தினாலும் மற்றவர் களுக்கு எந்த உதவியை செய்யக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு எவ்வளவு தான் பண பலமும் செல்வாக் கும் இருந்தாலும், மற்றவர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு உதவக்கூடிய இரத்த தானம் செய்யும் தகுதியும் உடல் ஆரோக்கி யமும் குறைவாகவே இருக்கின்றது.

எங்கள் நாட்டை பொறுத்தமட்டில் இன்று இரத்ததானம் செய்வது ஒரு முக்கிய சமூகப் பணியாக கருதப்படுகிறது. இன்று டெங்கு நோய், நாடெங்கிலும் அதிவேகமாக பரவி வருகின்றது. டெங்கு நோயை குணப்படுத்தும் வைத்திய சிகிச்சைகளில் நோயாளியின் உடலுக்கு தேவைப்படும் இரத்தத்தை செலுத்துவதும் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது.

வீதி விபத்துக்களினாலும் ஏனைய நோய்களினாலும் பெரும் உபாதை க்கு உட்பட்டிருப்பவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கும், அவர்களின் உடலில் இரத்தத்தை செலுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது.

இத்தகைய நல்ல நோக்கங்களை மனதில் கொண்டு, சுகாதார அமைச் சர் மைத்திரிபால சிறிசேன நாட்டின் நாலாபக்கங்களிலும் உள்ள பிரதான அரசாங்க ஆஸ்பத்திரிகளில் 50 இரத்த வங்கிகளை ஏற்படுத்துவது என்று தீர்மானித்திருக்கிறார். இன்று, இலங்கையில் அரசாங்கம் இரத்த வங்கிகள் மட்டுமன்றி, தனியார் இரத்த வங்கி களும் இயங்கி வருகின்றன.

இலங்கையில் பயங்கரவாத யுத்தம் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டி ருந்த போது, போர் முனையில் படுகாயமடைந்த பல்லாயிரக் கணக்கான ஆயுதப் படை வீரர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு இந்நாட்டு மக்கள் சாதி, மத, குல, பிரதேச பேதமின்றி தேசிய உணர்வுடன் இரத்ததானம் செய்த சம்பவங்களை நாம் இங்கு நினைவுகூருவது பொருத்தமாக இருக்கும்.

ஆயுதப் படை வீரர்களுக்கு மட்டுமல்ல, யுத்த முனையில் படு காயமடைந்த எல். ரி. ரி. ஈ. போராளிகளையும், யுத்தத்தினால் காய மடைந்த பொதுமக்களினதும் உயிர்களை காப்பாற்றுவதற்கு இவ் விதம் மக்கள் செய்த இரத்ததானம் பேருதவியாக அமைந்தது.

இரத்த தானம் செய்யுமிடத்து, அதனை தானமாக வழங்குபவர்களும் இரத்தத்தை தங்கள் உடலில் செலுத்துவதற்கு உடன்படும் நோயாளி அல்லது அவரது உறவினர்களும் அந்த இரத்தம் தூய்மையா னதா? எயிட்ஸ் நோயாளி ஒருவரின் உடலில் இருந்து பெறப்பட்ட இரத்தமா? அல்லது வேறு ஏதாவது நோய்த்தன்மை உடையவரின் இரத்தமா? என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

இது விடயத்தில் வைத்தியர்கள் இரத்த தானம் செய்பவரின் இரத்தத்தை முன்கூட்டியே பரிசோதித்து பார்த்து, அந்த இரத்தம் நோய்த்தன்மை அற்ற தூய்மையான இரத்தம் என்பதை ஊர்ஜிதம் செய்ய வேண்டும். அவ்விதம் வைத்தியர்கள் தங்கள் கடமையை சரிவரச் செய்யத் தவறினால், அதனால் அந்த இரத்தத்தை தங்கள் உடலில் செலுத்திக்கொள்ளும் அப்பாவி நோயாளிகள் பல்வேறு பிரச்சினை களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இலங்கையில் சிறந்த சிறுவர் வைத்திய நிபுணராக இருந்த ஒரு பெரு மதிப்பை பெற்றிருந்த பெண் வைத்தியர் ஒருவர் வீதி விபத்தில் காயமடைந்து, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது, அவருக்கு வைத்தியர்கள் தெரியாத்தனமாக எயிட்ஸ் நோய்த்தன்மை கொண்ட இரத்தத்தை உடலில் செலுத்தியதனால், அந்த வைத்தியர் எயிட்ஸ் நோயாளியானார். அவர், மற்றவர்களைப் போன்று தான் எயிட்ஸ் நோயாளி என்பதை பகிரங்கமாக அறிவிக்க கூச்சப்படவில்லை.

அந்தப் பெண் டாக்டர், எங்கள் நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும், எயிட்ஸ் ஒழிப்பு திட்டங்களுக்கு தலைமைதாங்கி மகத்தான சேவை செய்து, சில வருடங்களுக்குப் பின்னர் எயிட்ஸ் நோய்த்தன்மை மோசமடைந்த காரணத்தினால் மரணமடைந்தார். இந்த பரிதாபத் திற்குரிய நிகழ்வு இரத்ததானம் பெறும் ஒவ்வொருவரும் அவதானத் துக்கு எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

நாம் இங்கு தெரிவித்த அவதானங்களை வைத்து, எவரும் எங்கள் உடலில் இரத்தம் செலுத்தப்படக் கூடாது என்று பிடிவாதம் பிடிப் பது நல்லதல்ல. அத்தகைய போக்கை சம்பந்தப்பட்ட நோயாளி கடைப்பிடித்தால், அவர் இறுதியில் மரணத்தை தழுவ வேண்டி யிருக்கும்.

ஒரு சில மதங்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் இரத்த தானத்தை ஆதரிப்பதில்லை. அவர்கள் தங்கள் உயிர்களை இரட்சகரின் கையில் ஒப்படைத்துவிட்டு, அவர் காட்டும் வழியில் வாழ்க்கையை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இரத்ததானம் செய்ய வருபவர்களின் உடல் நிலை குறித்தும் வைத் தியர்கள் அவதானமாக இருக்க வேண்டும். போதைவஸ்துக்கு அடிமையான சிலர் அரைப் பைந்து இரத்ததானத்தை செய்து, இரத்த வங்கி கொடுக்கும் சிறிதளவு பணத்தைக் கொண்டு போதை வஸ்துக்களை வாங்குவதும் உண்டு. இத்தகையவர்களின் இரத்த த்தை தானமாக எடுக்க வைத்தியர்கள் மறுக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரத்த அழுத்த நோயினால் பாதிப்புக்குள்ளானவர்கள் ஆகியோரிடமிருந்து இரத்த வங்கிகள் பொதுவாக இரத்தத்தை தானமாக பெறுவதில்லை. ஒரு தடவைக்கு மேல் கூடுதலாக இரத்ததானம் செய்தவர்களுக்கும் இரத்த வங்கிகள் உரிய மதிப்பையும் சலுகைகளையும் கொடுப்ப துண்டு. அவர்கள் இரத்த தானம் செய்த எண்ணிக்கைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு வெள்ளி, தங்கம், பிளட்டினம் அட்டைகள் அன்பளிப்பு செய்யப்படும். 60 தடவைகளுக்கு கூடுதலாக இரத்த தானம் செய்தவர்களுக்கு பிளட்டினம் அட்டைகள் கொடுக்கப்படும்.

தேகாரோக்கியம் உடைய எதிர்கால சமுதாயம் ஒன்றை உருவாக்கு வதில் நம்பிக்கை வைத்துள்ள நாட்டுப்பற்றுள்ளவர்கள், தங்களால் முடிந்தளவுக்கு இரத்ததானம் செய்து, மற்றவர்களின் உயிர்களை காப்பாற்றுவது மிகவும் அவசியமாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி